For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை- ஆளுநர் மாளிகை விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலா தேவி கட்டுரைக்கான புகார் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்- வீடியோ

    சென்னை: பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    பேராசிரியை நிர்மலா தேவி, ஆளுநரை தொடர்புபடுத்தி நக்கீரன் நாளிதழில் அண்மையில் ஒரு செய்தி வெளியானது. இந்த கட்டுரைக்காக நக்கீரன் கோபால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

    அந்த கட்டுரையில் நிர்மலா தேவிக்கு துணைவேந்தர் பதவி கிடைப்பதற்காக அவர் தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிகளை பலிக்கடாவாக்கிவிட்டார்.

    [ நிர்மலா தேவி கட்டுரைக்காக புகார் ஏன்.. முதல் முறையாக மவுனம் கலைத்த ஆளுநர் மாளிகை.. பரபர அறிக்கை ]

    தகவல்கள்

    தகவல்கள்

    இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் அவரது செயலாளருக்கும் தொடர்பிருக்கிறது. உண்மையான குற்றவாளிகள் பிடிப்படாமல் இருக்கவே நிர்மலா தேவிக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாகவும் அந்த செய்தியில் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆளுநர் மாளிகை

    ஆளுநர் மாளிகை

    இதனால் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இத்தனை நாட்களாக மவுனமாக இருந்த ஆளுநர் தரப்பு இன்று தங்கள் மவுனத்தை கலைத்தது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

    சட்ட நடவடிக்கை

    சட்ட நடவடிக்கை

    அதில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்புப்படுத்துவது உண்மைக்கு புறம்பானது. போலீஸில் நிர்மலா கொடுத்த வாக்குமூலமே ஆளுநருக்கு தொடர்பில்லை என்பதை காட்டுகிறது. மிகுந்த பொறுமைக்கு பிறகே ஆளுநர் மீதான அவதூறுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கட்டுரை

    கட்டுரை

    நிர்மலா தேவி விவகாரம் வெளியாகி 6 மாதங்களாக ஆளுநர் மாளிகை பொறுமை காத்தது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக புலன் விசாரணை முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விசாரணைகள் முடிந்த நிலையில் நக்கீரன் இதழில் அவதூறு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

    அச்சுறுத்தல்கள்

    அச்சுறுத்தல்கள்

    நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழக ஆளுநரை தொடர்புபடுத்தி வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்லை. கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகை வந்ததே கிடையாது. நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாது.

    ஆளுநர் மாளிகை கடிதம்

    ஆளுநர் மாளிகை கடிதம்

    ஆளுநரையோ, செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா சந்திக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் ஆளுநர் தங்கவில்லை. அந்த பயணத்தின்போது செயலாளர் உடன் வரவில்லை என்று ஆளுநர் மாளிகை கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    Rajbhavan says that Nirmala Devi never visited Rajbhavan for the past 1 year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X