For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்... சொல்வது 'துக்ளக்' குருமூர்த்தி

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியுடன் கூட்டு என்ற பா.ஜ .க.வின் திட்டத்தை போட்டு உடைத்த குருமூர்த்தி

    சென்னை: பாஜகவும் ரஜினிகாந்தும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துக்ளக் பத்திரிகையின் 48வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அப் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:

    மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை. அதனால், திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.

    கூட்டணி கூடாது

    கூட்டணி கூடாது

    தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க வளர வேண்டும். அப்படியானால் இந்த இரு கட்சிகளும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது.

    திராவிட டிஎன்ஏ

    திராவிட டிஎன்ஏ

    ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது. இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது என்பது திராவிட டி.என்.ஏ வில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மீகத்தை மறக்கடித்துள்ளனர்.

    பாஜக ப்ளஸ் ரஜினி

    பாஜக ப்ளஸ் ரஜினி

    ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியது, திராவிட கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்.

    சுப்ரீம்கோர்ட் விவகாரம்

    சுப்ரீம்கோர்ட் விவகாரம்

    கமலின் அரசியல் வருகை கழகங்களின் தொடர்ச்சியாகவே இருக்கும். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குழாயடி சண்டையாகவே இருக்கிறது.

    இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.

    English summary
    Thuglak Editor Gurumurthy said that If Rajinikanth and BJP will join, they will change in Tamil Nadu politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X