For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து... ரஜினியின் உருவபொம்மையை எரித்த கன்னட அமைப்பினர்

காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்ததை அடுத்து அவரது உருவபொம்மையை கன்னட அமைப்பினர் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியின் உருவபொம்மையை எரித்த கன்னட அமைப்பினர்- வீடியோ

    பெங்களூர்: காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மையை கன்னட அமைப்பினர் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காவிரி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    Rajini effigy burnt in Karnataka

    இது காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை காட்டிலும் 14.75 டிஎம்சி குறைவானதாகும். இது தமிழகத்துக்கு ஏமாற்றத்தை தருவதாக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரஜினிகாந்தின் கருத்து என்னவாக இருக்கும் என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் நேற்று மாலை ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம், சன்னப்பட்னா மாவட்டத்தைச் சேர்ந்த கன்னட அமைப்பினர் ரஜினியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Rajinikanth tweets and says that he disappoints over SC Verdict on Cauvery in the Tamilnadu side. On condeming this, Kannada organisers burnt his effigy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X