For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழங்குடி மக்களோடு கபாலி வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை பழங்குடியின மக்களோடு இணைந்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

நாளைய தினம் உலக பழங்குடியினர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கபாலி வெற்றியுடன் சேர்த்து கொண்டாட முடிவு செய்த ரசிகர்கள், வாசுதேவநல்லூரை அடுத்த தலையணை என்ற இடத்தில் வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

 Rajini fans celebrate Kabali success with Tribal people

மாவட்ட அறிவியல் மையம், தமிழ்நாடு வனத்துறை, நெல்லை ரோட்டரி க்ளப், நெல்லை வீக்கெண்ட் க்ளிக்கர்ஸ் ஆகியோருடன் இணைந்து கபாலி வெற்றியை பழங்குடி மக்களுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி மக்கள், குழந்தைகளுக்கு பல் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தி, மதிய உணவும் வழங்கப்பட்டது.

 Rajini fans celebrate Kabali success with Tribal people

நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "நாம் அனைவருமே ஆதிவாசிகள்தான். ஒரு காலத்தில் மனிதர்களும் விலங்குகள் போலவே காடுகளுக்குள் அலைந்து திறிந்தவர்கள்தான். காலமாற்றத்துக்கேற்ப நாகரீக வாழ்க்கைக்கு பலர் மாறினாலும், நம்மவர்களில் சிலர் உலகம் முழுவதும் இன்னும் காட்டு வாழ்க்கையில் இருந்து மாறாமல் ஆதிவாசிகளாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நாம் பழங்குடியினர் என்று நாகரீகமாக அழைக்கிறோம்.

கபாலி படத்தின் கதை கூட ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதைதான். அதனால் கபாலி வெற்றிக் கொண்டாட்டத்தை பழங்குடியின மக்களோடு கொண்டாடும் வாய்ப்பு மாவட்ட அறிவியல் மையத்தால் அமைந்தது மகிழ்ச்சி.

 Rajini fans celebrate Kabali success with Tribal people

இந்த நிகழ்வில் பழங்குடியினத்தை சேர்ந்த 35 குடுபங்களுக்கு பல் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தி மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த முகாமில்ஒரு குடும்பத்திற்கு 5 உறுப்பினர்கள் என 150 பேர் பயனடைந்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களின் தற்போதைய வாழ்க்கை நிலை குறித்த ஒரு டாக்குமெண்ட்டரி படமும் எடுக்கப்பட்டது," என்று தெரிவித்தனர்.

English summary
Rajini fans have celebrated his Thalaivar Rajinikanth's Kabali success with Tribal people near Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X