For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி வேண்டுமானால் இப்படியே அடிமையாக இருக்கட்டும்.. மக்கள் அப்படி இருக்கமுடியாது : பாலகிருஷ்ணன்

ரஜினியின் பேச்சு பாஜகவின் குரலாகவே இருக்கிறது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி-வீடியோ

    சென்னை : ரஜினி வேண்டுமானால் இப்படியே அடிமையாக இருக்கட்டும். ஆனால், மக்களை போராட வேண்டாம் என்று சொல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி, அனைத்திற்கும் போராட்டம் தீர்வாகாது.

    Rajini has no rights to say people to Remain silent says Balakrishanan

    மக்கள் பிரச்னைகளுக்கு நீதிமன்றம் சென்று தீர்வு காண வேண்டும் அதுவே சரியான வழி. தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததே வன்முறைக்குக் காரணம் என்று குறிபிட்டார்.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ரஜினி இன்று தூத்துக்குடியில் பேசி இருப்பது முழுக்க முழுக்க பாஜகவின் குரலாகவே இருக்கிறது. தூத்துகுடியில் போராடியவர்கள் அனைவருமே சமூக விரோதிகள் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா ?

    ரஜினி வேண்டுமானால் எதற்கும் போராடாமல் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால், மக்களை அப்படி இருக்கச் சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Rajini has no rights to say people to Remain silent says Balakrishanan. CPM State Secretary Balakrishanan says that, Rajini speech shows that he is pro BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X