For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசியலில் ரஜினியும் கமலும் சாதிப்பார்களா? இல்லையா?... கருத்து கணிப்பில் பகீர் தகவல்

தமிழக அரசியலில் ரஜினியும் கமலும் சாதிக்க முடியாது என்று கருத்து கணிப்பு ஒன்று பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசியலில் கமல், ரஜினி நிலை என்ன?...கருத்துக்கணிப்பில் பகீர் தகவல்- வீடியோ

    சென்னை: தமிழக அரசியலில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சாதிக்க முடியாது என்று கருத்து கணிப்பு ஒன்று பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

    தமிழக அரசு குறித்து பல மாதங்களாக புகார் கூறி வந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

    ரஜினிகாந்தோ நேரம் வரட்டும், கட்சியை தொடங்கலாம் என்று கூறியுள்ளார். எனினும் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களுக்கு வாக்களித்துள்ளார்.

    அதிமுக வெற்றி

    அதிமுக வெற்றி

    நாடாளுமன்ற தேர்தல் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா கிட்டதட்ட பிரதமர் வேட்பாளராகவே அறிவிக்கப்பட்டார். எனினும் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று 3-ஆவது தேசிய கட்சியாக உருவெடுத்தது.

    அரசியலில் குதிப்பு

    அரசியலில் குதிப்பு

    இந்நிலையில் இந்த முறை ஜெயலலிதா இல்லாத நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா சந்திக்கவுள்ளது. இதனால் கட்சியின் செல்வாக்கை எடை போடும் முக்கிய தேர்தலாக விளங்கும் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் இல்லை. பெரும் ரசிகர்களுடன் உள்ள ரஜினியும், கமலும் அரசியலில் குதித்துள்ளனர்.

    அரசியல் களம்

    அரசியல் களம்

    நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி போட்டியிடுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அவர் தேர்தலுக்கு பிறகுதான் கட்சியே ஆரம்பிப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் புதிய தலைவர்களின் வரவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    அரசியலில்

    அரசியலில்

    இந்த சூழலில் தந்தி டிவி ஒரு கருத்து கணிப்பை நிகழ்த்தியுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? புதிய வரவுகளான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் சாதிப்பார்களா? என்பது பற்றி தந்தி டி.வி. தற்போது விரிவான கருத்து கணிப்பை நடத்தி உள்ளது.

    கருத்து கணிப்புகள்

    கருத்து கணிப்புகள்

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 8,250 பேரிடம் தனித்தனியாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 4,125 பேர் ஆண்கள்; 4,125 பேர் பெண்கள். ஜூலை 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.

    சாதிக்க மாட்டார்கள்

    சாதிக்க மாட்டார்கள்

    இதில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தமிழக அரசியலில் சாதிக்க முடியாது என்ற பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. அரசியலில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் வெற்றி பெறுவார்களா? என்று மக்களிடம் கருத்து கேட்டதில், 51 சதவீதம் பேர் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 49 சதவீதம் பேர் சாதிப்பர் என்று கூறியுள்ளனர். 51 சதவீதத்துக்கும் 49 சதவீதத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும் எதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    English summary
    Rajini kanth and Kamal hassan will not achieve their goals in politics. Thanthi TV survey reveals it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X