For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களுக்கு அரசியல் கற்றுத் தர தேவையில்லை.. ரஜினி சொல்கிறார்!

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு நடத்தி வருகிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கமல் பற்றி ரஜினி என்ன சொல்கிறார் தெரியுமா?- வீடியோ

    சென்னை: சென்னையில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் மீண்டும் ரஜினி சந்திப்பு நடத்தி வருகிறார்.

    ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை.

    நிர்வாகிகள் நியமனம்

    நிர்வாகிகள் நியமனம்

    அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. அதேபோல் சில மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் மட்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    நெல்லை

    நெல்லை

    இந்த நிலையில் தற்போது ரஜினி தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். இன்னும் சில நாட்களில் மற்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார்.

    கட்டமைப்புதான் எல்லாம்

    கட்டமைப்புதான் எல்லாம்

    அதேபோல் முதல்முறையா வெற்றி தோல்வி குறித்தும் ரஜினி பேட்டி அளித்து இருக்கிறார். இதில் பேசிய ரஜினிகாந்த் ''கட்சி கட்டமைப்புதான் அரசியலுக்கு முக்கியம். தோல்வியடைந்தாலும், கட்சி கட்டமைப்புதான் கட்சியை காப்பாற்றும்.'' என்றுள்ளார்.

    இயக்கம்

    இயக்கம்

    மேலும் ''நமது மக்கள் இயக்கம் 32 ஆண்டுகால கட்டமைப்பு கொண்டுள்ளது. எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றுத்தர தேவையில்லை. ரசிகர்களுக்கு அரசியல் குறித்த தெளிவு போதுமான அளவு இருக்கிறது'' என்று ரஜினி பேசியுள்ளார்.

    English summary
    Rajini has announced his political entry. After his announcement for the first time few Secretaries are appointed for Rajini Makkal Mandram. Rajini meets district secretaries Today in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X