For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியின் பார்வை.. "ராஜபார்வை" மீது!

Google Oneindia Tamil News

Recommended Video

    கமலை தொடர்ந்து கண்காணிக்கும் ரஜினியின் ராஜ பார்வை- வீடியோ

    சென்னை: உங்க வீட்டு பார்வை இல்லை.. எங்க வீட்டுப் பார்வை இல்லை.. அத்தனை உன்னிப்பாக கமல்ஹாசனின் ஒவ்வொரு அசைவையும் ரஜினிகாந்த் கவனித்து வருகிறாராம்.

    ஆக்சுவலி, கமலுக்கு முன்பே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். முன்பு என்றால் சுமாராக 20 வருடங்களுக்கு முன்பேயே கூட வந்திருக்க வேண்டும். அப்போதும் அவர் வரவில்லை. இப்போதும் கூட உறுதியாகத் தெரியவில்லை.

    நிறையப் பேர் ரஜினி எப்ப வருவார், எப்படி வருவார், எப்படியாச்சும் வந்துருவாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் ரஜினியின் பார்வை வேறு இடத்தில் ஆழமாக விழுந்திருக்கிறதாம். அதுவும் கொஞ்ச நாட்களாக படு உன்னிப்பாக கவனித்து வருகிறாராம்.

    எனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை! எனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை!

    கமல் மீது ரஜினி அக்கறை

    கமல் மீது ரஜினி அக்கறை

    கமல்ஹாசன், ரஜினியின் தற்போதைய பார்வை விழுந்துள்ள இடம். நாளுக்கு நாள் கமலுக்கு எகிறி வரும் ஆதரவு அவரது காதுகளுக்குப் போயுள்ளது. அதை விட தற்போது கோட்சேவை வைத்து மொத்தமாக தன் மீது கமல் அத்தனை பேரின் பார்வையையும் திருப்பிய விதம் ரஜினியை அதிர வைத்து விட்டதாம்.

    கமல் மீதான தாக்குதல்.. அமைதி காக்கும் முக்கிய தலைவர்கள்.. ரஜினி இப்போதும் சைலன்ட்! கமல் மீதான தாக்குதல்.. அமைதி காக்கும் முக்கிய தலைவர்கள்.. ரஜினி இப்போதும் சைலன்ட்!

    எது கிடைக்கும்

    எது கிடைக்கும்

    கமல்ஹாசனுக்கு நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபை இடைத் தேர்தலிலும் எப்படி ஆதரவு இருக்கும், மக்கள் அவரை எந்த இடத்தில் அமர வைக்கப் போகிறார்கள், அவருக்கு ஜெயிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆர்வத்துடன் தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்துக் கொண்டுள்ளாராம் ரஜினி.

    கோட்சே

    கோட்சே

    கோட்சே விவகாரம் தொடர்பாக எனது நண்பர்கள் கூட என்னைக் கைவிட்டு விட்டனர் என்று கமல் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார். அந்த நண்பர்களில் ரஜினியும் ஒருவர் என்பது கமல்ஹாசன் தரப்பின் ஆதங்கம். ஆனால் தான் ஏதாவது கூறப் போக அது வேறு மாதிரி போய் விட்டால் என்னாவது என்ற குழப்பத்தால்தான் ரஜினி கம்மென்று இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், ரஜினி எது பேசினாலும் அது சர்ச்சையாகிறது என்பதால்.

    கமலுக்கு வெற்றி

    கமலுக்கு வெற்றி

    அதேசமயம், கமலுக்கு அரசியலிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று ரஜினி மனதார கூறியுள்ளாராம். அவர் தொட்டது எதையும் விட்டதில்லை. இதிலும் அவர் ஜெயிப்பார், ஜெயிக்கட்டும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ரஜினி கூறினாராம். கமலுக்குக் கிடைக்கப் போகிற வரவேற்பைப் பொறுத்துதான் ரஜினியின் அரசியல் பயணம் இருக்கும் என்பதால் தற்போது அனைவரின் பார்வையும் கமல் மீது திரும்பியுள்ளது.

    "ராஜ பார்வை" வெல்லுமா??

    English summary
    Sources say that Rajinikanth is closely watching Kamal's moves and the Godse issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X