For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் வேட்பாளர்.. ஜனாதிபதி பதவி.. பாஜக விரிக்கும் வலையில் சிக்குவாரா ரஜினிகாந்த்

முதல்வர் வேட்பாளர், ஜனாதிபதி பதவி என அடுத்தடுத்து ரஜினிகாந்துக்கு பாஜக வலைவிரித்துக் கொண்டே இருக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜனாதிபதி பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தை பாஜக முன்னிறுத்தலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது தமிழக முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்தை பாஜக முன்னிறுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் கட்சிகள் பலவும் வலைவிரித்து கொண்டுதான் இருக்கின்றன. ரஜினிகாந்தும் தமது புதிய படம் ரிலீஸாகும் நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கருத்துகளை தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் வலுவாக உள்ள நிலையில் இங்கே கால்பதிக்க முடியாமல் தடுமாறுகிறது பாஜக. லோக்சபா தேர்தலின் போது ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பரபரப்பை கிளப்பியிருந்தார் மோடி.

ஆர்கே நகர் தேர்தல்

ஆர்கே நகர் தேர்தல்

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தை வளைத்துப் போடுவதில் பாஜக படுமும்முரமாக இருந்து வருகிறது. அண்மையில் ஆர்கே நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ரஜினிகாந்தை சந்தித்து பரபரப்பை கிளப்பியிருந்தார். ஆனால் ரஜினிகாந்தோ தாம் யாரையும் ஆதரிக்கவில்லை என அறிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி வேட்பாளர்

தற்போதைய சூழலில் அரசியலுக்கு வரவேண்டும் என ரஜினி ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஜனாதிபதி வேட்பாளராக ரஜினியை பாஜக பரிசீலித்து வந்தது.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

தற்போது தமிழக முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்தை முன்னிறுத்தும் யோசனையிலும் இருக்கிறதாம் பாஜக. இப்படி தொடர்ந்து பாஜக விரித்து வைக்கும் வலையில் சிக்குவரா? அல்லது தப்புவாரா ரஜினிகாந்த் என்பது விரைவில் தெரியவரும்.

English summary
Sources said that the BJP wishes to field Super Star Rajinikanth as CM candidate for Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X