For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கம் நீக்கமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக பதவி வகித்த ராஜு மகாலிங்கம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகிய நிலலையில், அதை மன்ற நிர்வாகி சுதாகர் மறுத்துள்ளார்.

அரசியலுக்கு வருவதாகவும், தனிக்கட்சி துவங்க உள்ளதாகவும், கடந்த டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதன்பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணிகள் துரித கதியில் ஆரம்பித்தன.

லைகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த ராஜு மகாலிங்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

கார்பொரேட் நிறுவனத்தை சேர்ந்த ராஜு மகாலிங்கத்தை ரஜினிகாந்த் தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார் என அப்போது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ராஜு மகாலிங்கத்தின் திறமையும் திட்டமிடலையும் பயன்படுத்திக்கொள்ள ரஜினிகாந்த் விரும்பியதால், இவரை மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகியாக நியமனம் செய்துள்ளார்கள் என்று அப்போது ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீக்கம் என வதந்தி

நீக்கம் என வதந்தி

இந்த நிலையில், ரஜினி மன்றத்திலிருந்து ராஜு மகாலிங்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகின. மன்றம் பக்கமே வரக் கூடாது என்று ரஜினி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. மன்றத்தினர் யாரும் ராஜு மகாலிங்கத்துடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

தீயாய் பரவிய தகவல்

தீயாய் பரவிய தகவல்

ராஜு மகாலிங்கம் பற்றி ரஜினி குடும்பத்தாருக்கு அபிப்ராயம் இல்லை என்றும், அவர்கள் வலியுறுத்தலால் ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் கொடிகட்டி பறந்தன. முன்னதாக, ரஜினிகாந்த் இன்று தனது வீட்டில் ராஜு மகாலிங்கத்துடன் 15 நிமிடங்கள் பேசி விளக்கம் கேட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன. ஆனால், இதை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மறுத்துள்ளார்.

நிர்வாகி மறுப்பு

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், "சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து திரு . ராஜு மஹாலிங்கம் அவர்களை நீக்கி விட்டதாக செய்தி பரவிவருகிறது , இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்பவேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Rajinikanth, expels Raju Mahalingam from his Mandram. Instructs his office bearers not to have any truck with Raju, says sources. But Mandram exicutive Sudhakar refused it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X