For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினிகாந்த்தை கட்டுப்படுத்தும் "கார்ப்பரேட்".. கடும் அதிருப்தியில் ரசிகர்கள், நிர்வாகிகள்!

ரஜினிகாந்தை கார்ப்பரேட் நிறுவனம் கட்டுப்படுத்தி வருவதால் ரசிகர்கள், நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம்.

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    கார்ப்பரேட் கட்சியாக விஸ்வரூபமெடுக்கும் ரஜினி கட்சி? | Oneindia Tamil

    சென்னை: கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டில் ரஜினிகாந்தின் அரசியல் செயல்பாடுகள் இருப்பதால் ரசிகர்களும் நிர்வாகிகளும் கொந்தளிப்பில் இருக்கின்றனராம்.

    ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது.

    மாநில செயலாளர் நியமனம்

    மாநில செயலாளர் நியமனம்

    தற்போதைய நிலையில் ரஜினியின் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளுக்குமே ஒரு கார்ப்பரேட் கம்பெனியே பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தப்படும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் நியமனமும் இருக்கிறது.

    காத்திருப்புக்கு பின்...

    காத்திருப்புக்கு பின்...

    இது ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதாம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகி ஒருவர், இத்தனை ஆண்டுகாலம் தலைவருக்காக காத்திருந்தோம்.. தலைவரும் அரசியலுக்கு வந்துவிட்டார். நாங்களும் நம்பிக்கையோடு கட்சிப் பணிகளை தொடங்கிவிட்டோம்.

    எங்களுக்கு இல்லையா?

    எங்களுக்கு இல்லையா?

    இந்நிலையில் திடீரென வந்த ஒருவருக்கு மாநில பதவி கொடுக்கப்பட்டு அவரது கட்டுப்பாட்டில் எங்களை செயல்பட சொல்கிறார் தலைவர். இதை எங்களால் எப்படி ஜீரணிக்க முடியும் என்று குமுறினார்.

    கார்ப்பரேட் கம்பெனியிடம் அடகு வைப்பதா?

    கார்ப்பரேட் கம்பெனியிடம் அடகு வைப்பதா?

    ரசிகர்களைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்துக்கும் கார்ப்பரேட் கம்பெனிக்குமான உறவு எப்படியாக வேண்டுமானால் இருக்கட்டும். அதற்காக ரசிகர்களை நிர்வாகிகளை கார்ப்பரேட் கம்பெனியிடம் அடகு வைப்பது எப்படி ஏற்க முடியும். 20 வருடமாக அடியும், அவமானத்தையும் மட்டுமே பார்த்து வந்த எங்களுக்கு இதுதான் பரிசா எனவும் பொருமுகின்றனர்.

    English summary
    According to the source said that the Rajinikanth fans are very upset over the control of Corporate company.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X