For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும்- ரஜினி ஆவேசம்

எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று ரஜினி ஆவேசமாக தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய ரஜினி!-வீடியோ

    சென்னை: மக்கள் எல்லாவற்றிற்கும் போராடி கொண்டே இருந்தால் தமிழகமே சுடுகாடாவிடும் என்று ரஜினி ஆவேசமாக தெரிவித்தார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினி. இதையடுத்து அவர் மாலை சென்னை திரும்பினார்.

    சமூக விரோதிகள்

    சமூக விரோதிகள்

    அப்போது சென்னை விமான நிலையத்தில் ரஜினி பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததில்தான் போராட்டம் வன்முறையாக மாறியது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்த போல் தூத்துக்குடி போராட்டத்திலும் புகுந்துவிட்டனர்.

    மீனவ மக்கள்

    மீனவ மக்கள்

    மேலும் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியது எல்லாம் அப்பாவி மக்கள் மற்றும் மீனவ மக்கள், ஆனால் சமூக விரோதிகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரை அடித்தனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தினர், குடியிருப்புகளை எரித்ததும் அவர்கள்தான் என்று தெரிவித்தார்.

    காவல் துறையினர்

    காவல் துறையினர்

    சமூக விரோதிகள் தான் போராட்டத்தில் புகுந்தனர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த ரஜினி அது எப்படி தெரியும் என்றால் எனக்கு தெரியும் அவ்வளவுதான் என ஆவேசமாக கூறினார். இந்த பிரச்சனையின் ஆரம்பமே அந்த சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்தனர் அதுதான்.

    சுடுகாடாகிவிடும்

    சுடுகாடாகிவிடும்

    காவல்துறையினர் தங்கள் உடையில் இருக்கும்போது அவர்களை அடித்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் ஓகே என ஆவேசமாக கூறினார். மக்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் தேங்க்யூ என்று கூறிவிட்டு விர்ரென புறப்பட்டார்.

    English summary
    Rajinikanth gets annoy over people's protest for all thing. If so, TN will become graveyard.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X