For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி ஆட்சி அமலாகட்டும்.. பிறகு பார்த்துக்கலாம்.. இதுதான் ரஜினி வியூகமாமே!

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என்பதுதான் ரஜினிகாந்தின் வியூகமாம்.

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜனாதிபதி ஆட்சிக்காக காத்திருக்கும் ரஜினி- வீடியோ

    சென்னை: சென்னை: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரும்... அப்போதுதான் சுற்றுப் பயணம் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பொறுமை காப்போம் என வியூகம் வகுத்து காத்துகிடக்கிறாராம் ரஜினிகாந்த்.

    ரஜினிகாந்தை அரசியல் கட்சி தொடங்கும் கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியான சந்திப்பு; அரசியல் பேசவே இல்லை என கமல் கூறினார்.

    ஆனால் இச்சந்திப்பில் பல்வேறு விஷயங்களை ரஜினியும் கமலும் மனம் திறந்து பேசியுள்ளனர். அதில் ஒன்று சுற்றுப் பயணம் மேற்கொள்வது பற்றியது.

     ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது

    ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது

    கமல்ஹாசன் சுற்றுப் பயணத்தை தொடங்கும் நிலையில் ரஜினிகாந்த் தமது வியூகத்தை விவரித்திருக்கிறார். அதாவது தற்போதைய நிலையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள் என தெரியாது.

     ஆளுநரின் ஆய்வு முடியும்

    ஆளுநரின் ஆய்வு முடியும்

    பல இடங்களில் பிரச்சனைகள் வரும்.. என்னுடைய உடல்நிலையையும் நான் பார்க்கனும். டெல்லி கொடுத்த அசைன்மென்ட்படி அனேகமாக ஆளுநர் இன்னும் 10,12 மாவட்டங்களில் ஆய்வை முடித்துவிட்டு ஆட்சி தொடர்பாக அறிக்கை அனுப்புவார்.

     ஜனாதிபதி ஆட்சியில் பயணம்

    ஜனாதிபதி ஆட்சியில் பயணம்

    அதாவது சில மாதங்களில் இந்த ஆட்சி போய்விடும்... இங்கே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். அப்போது சுற்றுப் பயணம் செய்தால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என கமலிடம் கூறினாராம் ரஜினி.

     முதலாண்டு நாளில் பயணம்?

    முதலாண்டு நாளில் பயணம்?

    மேலும் நீங்க முதலில் சுற்று பயணம் போய்ட்டு பீட்பேக் சொல்லுங்க...அதற்கேற்ப நானும் என்னை தயார் செய்து கொள்கிறேன் என்றும் கமலிடம் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் தெரிவிப்பதைப் பார்த்தால் ஆன்மீக அரசியல் அறிவித்து முதலாமாண்டு நாளில்தான் சுற்றுப் பயணம் தொடங்குவார் போல தெரிகிறது.

    English summary
    According to the Sources said that Rajinikanth will go to political tour after 3 months.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X