For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார் ரஜினிகாந்த்

பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்காக ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் ரஜினிகாந்த்

    சென்னை: பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்காக ரஜினிகாந்த் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேட்டி அளிக்கையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். சமூக விரோதிகள் போலீஸை தாக்கியதால்தான் பிரச்சினை ஏற்பட்டது என்றார்.

    ஆதரித்து பேச்சு

    ஆதரித்து பேச்சு

    இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சமூகவிரோதிகள்தான் வன்முறையை ஏற்படுத்தினர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்றும், போலீஸையே ஆதரித்து பேசுகிறீர்களே என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    ஆவேசமடைந்த ரஜினி

    ஆவேசமடைந்த ரஜினி

    இதனால் கோபமடைந்த ரஜினி, யே யார்யா என ஒருமையில் பேசிவிட்டு வேறு கேள்வி இருக்கா என்று கேட்டுவிட்டு பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டார். இந்நிலையில் செய்தியாளர்களை ரஜினி ஒருமையில் பேசியது குறித்து சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் புகார் தெரிவித்தது.

    புகார்

    இந்நிலையில் ரஜினி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    நான் வருந்துகிறேன்

    நான் வருந்துகிறேன்

    யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Rajinikanth regrets for his singular speech on journalists in Chennai Airport press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X