• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஜினிக்கு ஏழரை சனியாச்சே.. அரசியலுக்கு வருவது சாதகமா? பாதகமா?

By Mayura Akilan
|
  ரஜினிக்கு ஏழரை சனியாச்சே | விடியோ | Oneindia tamil

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சு மீண்டும் ஆரம்பித்து விட்டது. ரஜினிகாந்திக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. அவரது அரசியல் பயணம் சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். டிசம்பர் 26 முதல் 31 வரையிலான நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ரஜினியே அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

  ரஜினிகாந்த் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ஏழரை சனி தொடங்கியுள்ளது. அவர் அரசியலுக்கு வருவதற்கு இது சரியான சமயம்தானா என்று பலரும் கேட்கின்றனர்.

  ரஜினிக்கு நேரம் வந்தாச்சு

  ரஜினிக்கு நேரம் வந்தாச்சு

  கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு. இனி எந்த நாளில் அவர் அரசியல் கட்சித் தொடங்கினாலும், அவர் நினைத்தது நடக்கும். தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

  அரசியல் வாழ்க்கை

  அரசியல் வாழ்க்கை

  ரஜினிகாந்துக்கு கடந்த 19 வருடங்களாக சனி தசை நடந்தது. அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. 2018 ஜனவரி 21 தேதியுடன், ரஜினிகாந்த்துக்கு சனி திசை முடிவடைகிறது. பிறகு புதன் திசை ஆரம்பமாகிறது. ரஜினி ராசிப்படி, புதன்திசையில் கல்வி, ஞானம் தொடர்பான விஷயங்களில் இயல்பாக ஆர்வம் ஏற்படும். இந்த நாட்டம் அரசியலுக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது. கல்வி தொடர்பான உதவிகளை மக்களுக்கு அவர் செய்வார்.

  ரஜினி ஜாதகம்

  ரஜினி ஜாதகம்

  ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத்தான் அவரின் ஜாதகம் சொல்கிறது. தனிக்கட்சி தொடங்கத்தான் வாய்ப்பு அதிகம். 69 வயது 6 மாதங்களுக்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும். அப்படி அவர் அரசியலுக்கு வந்தாலும், எல்லாமே வெற்றிதான் என்று கூறியுள்ளார். மற்றொரு ஜோதிடர்.

  அரசியலில் வெற்றி

  அரசியலில் வெற்றி

  சிம்ம லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ரஜினியின் ஜாதகத்தில் ஏழரைச் சனி ஆரம்பித்துள்ளது. இந்தக் காரணத்தினால், இவருக்கு அரசியலில் வெற்றி கிடைக்காது. இவரை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இன்னொரு ஜோதிடர் கூறுகிறார்.

  அரசியல் எடுபடாது

  அரசியல் எடுபடாது

  இவரது ஜாதகத்தில் 2ம் இடத்தில் ஆன்மிக கிரகமான கேது, சனியுடன் கூடியுள்ள காரணத்தினால் ஆன்மிக வழியையே இவரது மனம் நாடும். அதையும் மீறி அரசியலுக்கு வந்தால், எந்தக் காலத்திலும் ஜொலிக்க முடியாது. ரிஷப ராசியைப் பார்வை இடுவதால் ரஜினிக்கு அரசியல் எடுபடாது.

  ரஜினி யோசிக்கலாம்

  ரஜினி யோசிக்கலாம்

  தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று 1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க.- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பேசிய போது நல்ல பலன் கிடைத்தது அப்போது அரசியலில் அடியெடுத்து வைத்திருந்தால், ஜெயித்திருக்கலாம். ஏழரை சனி நடைபெறும் இந்த காலத்தில் அரசியலில் வெற்றி சாத்தியமில்லை என்று கூறுகிறார் மற்றொரு ஜோதிடர்.

  தமிழக அரசியல்

  தமிழக அரசியல்

  கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதன் முறையாக ரசிகர்களை ரஜினி சந்தித்தார். நான் ஆண்டவனின் கருவி இன்று நான் நடிகனாக வேண்டும்என்று அவர் விரும்பினார். அதேபோல் நாளை நான் என்னாவாக வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிப்பார் என்றார். இறுதிநாளன்று பேசும்போது தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுவிட்டது. போர் வரும் போது பார்த்து கொள்ளலாம். ஆண்டவன் இருக்கான் என்று தெரிவித்தார். இந்த பேச்சு அப்போது பரபரப்பானது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Rajinikanth's Prediction This is the best period for Rajinikanth to travel. Just let go and enjoy the happiness that comes Rajinikanth's way. At last Rajinikanth can relax and enjoy the success and the results of the hard work Rajinikanth had been doing for a long time.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more