• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலா.. ரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்.. இதைவிட தெளிவாக கலாய்க்க முடியாது!

By Veera Kumar
Google Oneindia Tamil News
  ரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்- வீடியோ

  சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியான காலா திரைப்படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள்.

  காலா திரைப்படத்தில் ரஞ்சித் பல்வேறு குறியீடுகளை வைத்திருந்ததாக கூறி அவற்றை சிலாகித்து சொல்வோர் ஒருபக்கம். ரஜினிகாந்த் செம்ம டான், என்னா பஞ்ச் டயலாக் என புழகாங்கிதம் அடைவோர் மறுபக்கம்.

  Rajinikanths mass appeal lacking in Kaala movie

  ஆனால், ரஜினிகாந்த்தின் மாஸ் ஹீரோ உருவாக்கத்தை காலா படம் தக்க வைத்ததா என்ற கேள்விக்கு சற்று உற்று படத்தை கவனித்தோருக்கு இல்லை என்பதுதான் விடையாக கிடைக்கும்.

  காலா என்பது சாதாரண ஒரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும் இயக்குநரின் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். அதை அவர் சரியாக செயல்படுத்திவிட்டார். ஆனால், கபாலி ரஞ்சித் படம், காலா எனது ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் விழா ஒன்றில் பட ரிலீசுக்கு முன்னால் கூறியிருந்தது பலிக்கவில்லை.

  மழையில், பாலத்தின் மீது நடக்கும் சண்டை காட்சி ஒன்றை தவிர்த்துவிட்டு பாரத்தால் ரஜினிகாந்த் என்ற மாஸ் நடிகரை முன்வைத்து எழுப்பப்படும் பிம்பங்கள் உடனுக்குடன் பலூன் போல உடைக்கப்பட்டுள்ளது. வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன், டயலாக்கை தொடர்ந்து வரும் காட்சி, மனைவி, மகனை இழந்த பிறகு, வில்லன் வீட்டுக்கே ரஜினிகாந்த் செல்லும்போது நிகழும் காட்சிகள் எல்லாமே, ஹைப்பை ஏற்றிவிட்டு சப்பென முடியும் காட்சிகள்.

  இதை மிக தெளிவாக இந்த பேஸ்புக் பதிவு புடம்போட்டு காட்டியுள்ளது. பாருங்கள், காலா படத்தின் ரஜினிகாந்த் கதாப்பாத்திர காட்சியமைப்பை பற்றிய மற்றொரு கோணத்திலான புரிதல் ஏற்படும். இதை படியுங்கள்:

  #காலா _Last_but_ not_least

  பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க.

  போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்?

  ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க.

  எப்டி..எப்டி?

  வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான்.

  இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு பிரிக்கணும்..அதானே?

  இல்லை பாஸ்..நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடுறீங்க.

  ஏன்?

  ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.

  அப்புறம்?

  வில்லன் உங்க அப்பாவை கொன்னுடறான்

  ஹா..இப்போ நான் பொங்கி எழுந்து சும்மா..

  பாஸ்...பாஸ்..அதெல்லாம் இல்லை. நீங்க உங்க ஏரியா பொடிசுகளோட கிரிக்கெட் விளையாடி க்ளீன் போல்டு ஆகிறீங்க.

  ஏன்பா அப்படி?

  ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான் பாஸ்.

  இப்பவே கிர்ருங்குதே தம்பி..

  இதுக்கே அசந்துட்டா எப்படி சார்..இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் வச்சிருக்கேன். வில்லன் இப்போ உங்க ஏரியா நிலத்தையெல்லாம் அபகரிக்க வர்றான்.

  நான் ஒரு வீச்சரிவாளோட போய் அவனை..

  நோ..நோ..வில்லனை நீங்க இப்போ ஒன்னும் செய்யக்கூடாது பாஸ்.

  ஏன்?

  ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.

  ஹய்யோ..சரி சொல்லு.

  அப்புறம், வில்லன் உங்க மூத்த மகனைக் கொன்னுடறான்.

  இது சூப்பர் தம்பி...என் பிள்ளை மேலயா கைவச்சேன்னு துப்பாக்கியோட போய்...

  பாஸ்...அதெல்லாம் இல்லை பாஸ்.

  அதுவும் இல்லையா? ஏன்ன்ன்?

  ஏன்னா நீங்க ஒரு......நீங்க ஒரு வித்தியாசமான டான். மறந்துட்டீங்களா பாஸ்?

  ஏம்பா, வித்தியாசம் தான் இருக்கு. டானைக் காணோம்?

  பொறுங்க பாஸ்..வில்லன் உங்க பொண்டாட்டியைவும் கொன்னுடறான்.

  அவளையுமா? இப்பவும் நான் சும்மா இருக்கணும்...அதானே?

  இல்லை பாஸ்...ஸ்லோமோசன்ல வில்லன் வீட்டுக்குப் போறீங்க.

  ஹாஹா...தியேட்டர்ல சும்மா விசில் பறக்குது..

  ஆமாம் பாஸ்...போய் வில்லனைப் பிடிச்சு 'கறுப்பு உழைக்கும் வர்க்கத்தின் கலர்'ன்னு சொல்லிட்டு வந்துடறீங்க.

  ஏன்..ஏன்...ஏன்?

  ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். அப்புறம், வில்லன் அடியாட்களை அனுப்பி, உங்க வீட்டைக் கொளுத்தி, ஏரியாவைக் கொளுத்தி உங்க உயிர் நண்பனையும், இளைய மகனையும் மண்டையைப் பொளந்துடறான்.

  இப்போ என்ன, நான் உண்ணாவிரதம் இருக்கணுமா?

  இல்லை பாஸ்...அந்த சிரமம்கூட உங்களுக்கு வேண்டாம்னு, வில்லன் ஆளுங்க உங்களையும் கொன்னுடறாங்க.

  என்னையுமா?

  ஆமா பாஸ்.

  தம்பி, என்னையுமா தம்பி?

  ஆமா பாஸ்

  நாந்தான் ஒன்னுமே செய்யலையேப்பா?

  ஆமா பாஸ்...ஆனாலும் நீங்க ஒரு வித்தியாசமான டான் இல்லையா? அதனால கொன்னுடறாங்க.

  ஆஹாங்...அப்புறம்?

  வில்லன் மறுபடியும் நிலத்தை அபகரிக்க வர்றான்..மக்கள் பொங்கி எழுந்து, வில்லன் மூஞ்சில கோலமாவைப் பூசி, அவனைக் கொன்னுடறாங்க பாஸ்.

  மக்கள் என்ன தம்பி செய்யறாங்க?

  வில்லனைக் கொன்னுடறாங்க சார்.

  டேய்...இதைத் தானடா நான் முதல்லயே செய்யறேன்னு சொன்னேன். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இதே மக்களே முதல் சீன்லயே இதை செஞ்சிருப்பாங்களேடா...அப்படிப் பண்ணியிருந்தால், என் பொண்டாட்டி, பிள்ளைகள், ஆடியன்ஸ்ன்னு எல்லாருமே தப்பிச்சிருக்கலாமே? ஏண்டா இப்படிப் பண்ணே?

  அதான் சொன்னேனே பாஸ்...நீங்க ஒரு வித்தியாசமான டான்னு..அதனால தான்!!

  English summary
  Rajinikanth's mass appeal lacking in Kaala movie, here is the perfect example given by a netizen.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X