For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி: ஆமா நீங்க யாருங்க? சிகிச்சை பெற்ற இளைஞர் கேட்க 'வெளிறிய' ரஜினி- வைரல் வீடியோ

தூத்துக்குடி மருத்துவமனையில் ரஜினியிடம் இளைஞர் கேட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியை யார் என்று கேட்ட இளைஞர்-வீடியோ

    தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என வெறுப்புடன் கேள்வி கேட்க ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே முகம் வெளிறியபடி நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

    தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கம் போல குளறுபடியான அறிக்கைகளையும் கருத்துகளையும் ரஜினிகாந்த் வெளியிட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது.

    Rajinikanths Tuticorin video goes on Viral

    இந்த நிலையில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் போது திடீரென தூத்துக்குடிக்கு ரஜினி வருகை தந்தார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மட்டும் பார்த்து 'சிரித்துவிட்டு' சென்னை திரும்பிவிட்டார்.

    மருத்துவமனையில் இளைஞர் ஒருவருடன் ரஜினிகாந்த் சிரித்தபடியே நடத்தும் உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரஜினி வந்த போதும் எந்த பரபரப்பும் இல்லாமல் படுக்கையில் இருந்து எழும் இளைஞர், ஆமா நீங்க யாருங்க? என ரஜினியிடம் கேட்கிறார். அதற்கு ரஜினி ஏதோ பதிலை சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

    மீண்டும் இளைஞர் கேள்வி கேட்க பதிலேதும் சொல்லாமல் சிரித்த படி முகம் வெளிறிய நிலையில் ரஜினி வெளியேறுவதாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 100 நாள் போராடிய போது வராத நீங்க இப்ப ஏன் வந்தீங்க.. இவரு ரஜினிகாந்துன்னு எங்களுக்கு தெரியாதா? என அந்த இளைஞர் கேட்டதாக அம்மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Rajinikanths' Tuticorin Hospital visit video went on viral in Social medias.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X