For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள எட்டு வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு

தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் நேற்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த்-வீடியோ

    சென்னை: தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள 8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பெரிய பெரிய திட்டங்கள் வர வேண்டும்.

    இழப்பீடு

    இழப்பீடு

    8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவானால்தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும். வேலைவாய்ப்புகளும் பெருகும். இதுபோல் செய்யும்போது இழப்பீடு என்பது சிலருக்கு வரும்.

    நிதி

    நிதி

    பாதிக்கப்படுபவர்களின் மனம் திருப்தி அடையும் அளவுக்கு அவர்களுக்கு இழப்பீட்டு தொகையோ அல்லது நிலத்தையோ அரசு அளிக்க வேண்டும். முடிந்த வரை விவசாய நிலத்தை பாதிக்காத அளவுக்கு 8 வழிச்சாலை அமைத்தால் இன்னும் நல்லது.

    சிறப்பாக உள்ளார்

    சிறப்பாக உள்ளார்

    காமராஜரை போல் தலைசிறந்த அரசியல்வாதி மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பது மக்கள் மற்றும் எனது ஆசையும் கூட. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே உள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    லோக் ஆயுக்த

    லோக் ஆயுக்த

    சக்திவாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும். தமிழருவி மணியன் அரசியலில் என்னுடன் இணைய நினைத்தால் மகிழ்ச்சியே. காந்திய, காமராஜரின் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் ஒருவர் என்னுடன் இணைந்தால் சந்தோஷம்தான் என்றார்.

    English summary
    Rajinikanth says that 8 way path between Salem and Chennai is important one for development of country. Despite of farmers oppose for the project, Rajinikanth who going to start political party supports it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X