For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த்

கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த்

    சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு சினிமா துறை சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    Rajinikanth says that i cannot think even Tamilnadu without Karunanidhi

    இதில் ஸ்டாலின், ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருணாநிதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரஜினி கூறுகையில் கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை.

    நான் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி கிளம்பி வந்தபோது அந்த காலையிலேயே அப்படி ஒரு கூட்டம். அதைப் பார்த்து நான் அசந்து விட்டேன். கருணாநிதிக்காக கூடிய கூட்டத்தைப் பார்த்ததும், என்றென்றும் நன்றி மறவாதவர்கள் தமிழர்கள் என்று நெகிழ்ந்தேன். கருணாநிதி இறுதி நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் கூட்டம் அதை நிரூபித்தது. கூட்டத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

    Rajinikanth says that i cannot think even Tamilnadu without Karunanidhi

    மெரீனாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன். கருணாநிதியால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். தமிழகம் பெரிய அடையாளத்தை இழந்துவிட்டது. 50 ஆண்டில் பல்வேறு சூழ்ச்சி, துரோகங்களை தாண்டி கட்சியை காத்தவர் கருணாநிதி.

    சிவாஜி, எம்ஜிஆர் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி. மலைக்கள்ளன் படத்தின் மூலம் எம்ஜிஆரை ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி. சிவாஜியையும் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாராக்கியவர் இவர்தான் என்றார் ரஜினிகாந்த்.

    English summary
    Rajinikanth says in mourning function that i cannot think even Tamilnadu without Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X