For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடியூரப்பாவுக்கு 15 நாள் டைம் கொடுத்தது கேலிக்கூத்தானது.. படு லேட்டாக ரியாக்ட் செய்த ரஜினி

கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தது கேலிக் கூத்தானது என்று ரஜினி விமர்சனம் செய்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    திடீரென பொங்கியெழுந்த ரஜினிகாந்த்-வீடியோ

    சென்னை: கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தது கேலிக் கூத்தானது என்று ரஜினி விமர்சனம் செய்துள்ளார்.

    கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை கிடைக்காத போது எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மேலும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

    இது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்று இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    மகளிர் மன்றத்தினர்

    மகளிர் மன்றத்தினர்

    சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் உறுப்பினர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தினார். இதில் சில முக்கியமான விவகாரங்கள் குறித்து வர ஆலோசனை நடத்தினார்.

    ரஜினிகாந்த் கூறியது

    ரஜினிகாந்த் கூறியது

    அப்போது ரஜினிகாந்த் கூறுகையில் கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தது கேலிக் கூத்தானது. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகா ஆளுநர் அதுபோல் செய்திருக்கக் கூடாது.

    காவலர்கள் செய்தது தவறில்லை

    காவலர்கள் செய்தது தவறில்லை

    மெரினாவில் ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல் துறை தடைவிதித்துள்ளது குறித்து கேட்கிறீர்கள. காவல்துறை காரணமின்றி எதற்கு தடை விதிக்காது என்பது என்னுடைய கருத்து என்றார் ரஜினி.

    ரஜினி வக்காலத்து

    ரஜினி வக்காலத்து

    ஐபிஎல்லுக்கு எதிராக அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தின்போது போலீஸாரை ஒரு கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. அப்போது தனது டுவிட்டரில் ரஜினி கூறுகையில் சீருடையில் இருந்த போலீஸாரை மர்ம நபர்கள் தாக்கியது வன்முறையின் உச்சம் என்றார். இன்று நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல் துறை தடை விதிக்காது என்றார். இது நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும்.

    English summary
    Rajinikanth opposes that the Governor gives 15 days time for BJP to prove its majority.Its also very funny to hear.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X