For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் மதசார்பற்ற பூமி: மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்கக் கூடாது - ரஜினி

தமிழகம் மதசார்பற்ற பூமி என்பதால் அங்கு மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்கக் கூடாது என்று ரஜினி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மதசார்பற்ற மாநிலம். இங்கு ரதயாத்திரையின்போது மதக் கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளுக்கு மத்தியில் கடந்த 10ம் தேதி ஆன்மிக யாத்திரையாக ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். விமான நிலையித்தில் அவரிடம் காவிரி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

Rajinikanth says that TN Government should not allow communal violences

ஆனால் அதற்கு அவர் பதில் ஏதும் கொடுக்காமல் சென்றுவிட்டார். 15 நாட்கள் என்று கூறப்பட்ட ஆன்மிக பயணம் 10 நாட்களாக சுருக்கப்பட்டது.

இன்று இமயமலையில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது போயஸ் தோட்டத்தில் அவர் பேட்டி அளிக்கையில் , இமயமலை சென்று திரும்பிய பிறகு புத்துணர்ச்சி அளிக்கிறது.

ரத யாத்திரை மூலம் மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்க கூடாது. ரத யாத்திரையின் போது மதக்கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும்.

தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம் ஆகும். மதகலவரம் எந்த வடிவில் வந்தாலும் அதை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புதுக்கோட்டையில் ஆலங்குடி பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் காட்டுமிராண்டித்தனம் என்றார் ரஜினி.

English summary
Rajinikanth says that the TN is a secular state. It should not be a place for communal violences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X