For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நான் அரசியலுக்கு வருகிறேன்"... ஆனால்.... இதுதான் ரஜினியின் அறிவிப்பு

ரஜினிகாந்த் நாளை அறிவிக்கப் போவது என்ன என்பது குறித்து தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

    சென்னை : ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக நாளை அறிவிக்க போகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் ரஜினி அரசியலுக்குடன் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார். அப்போதிலிருந்து அவர் யாருக்கு வாய்ஸ் கொடுக்கிறார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பாகவே இருந்து வந்தது.

    இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் வாய்ஸ் கொடுத்த போது அது எடுபட்டது. ஆனால் அடுத்தடுத்து அவரது வாய்ஸ் எடுபடவில்லை. இதனால் அவரும் வாய்ஸ் கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்.

    அரசியல் ஆசை

    அரசியல் ஆசை

    ரஜினிகாந்த் எங்கு பேசினாலும் என்னை வாழ வைத்து தெய்வங்களாகிய அன்பு ரசிகர்கள் என்றே தொடங்குவார். அதுபோல் வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை ரஜினிக்கு நீண்ட காலமாக உண்டு என்று அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் இத்தனை ஆண்டுகளாக அரசியல் குறித்து பேசாமல் இருந்தவர் கடந்த மே மாதம் பேசினார் என்கின்றனர்.

    என்ன கூறுவார்

    என்ன கூறுவார்

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் அவர் செய்து விட்டார் என்றும் இன்னும் அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் இரண்டாவது தடவையாக ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த் 31-ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க போகிறார்.

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ரஜினி ரசிகர்கள் சந்திப்பின் தொடக்க நாளில் இருந்தே சற்று குழப்பும் நிலையில் பேசிவருகிறார் என்ற கருத்துகளும் நிலவுகின்றன. ஆனால் ரஜினி மனதில் என்ன இருக்கிறது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்கிறது ஒரு தரப்பு. இந்நிலையில் காலா படத்துக்கு பிறகு ஆண்டவன் என்ன சொல்கிறானோ பார்ப்போம் என்று ரஜினி கூறியுள்ளார்.

    ஆனால்....

    ஆனால்....

    இதைவைத்து பார்க்கும் போது ரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் அதுகுறித்து கட்சி, சின்னம், பெயர், நிர்வாகிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் காலா படத்துக்கு பிறகுதான் இருக்கும் என்கின்றனர். 2.0 படம் ஏப்ரல் 14-இல் ரிலீசாகும். காலா படமோ ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும். அதற்குள் தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப ரஜினியின் முடிவு இருக்கும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே அரசியலுக்கு வருவேன் என்கிற அறிவிப்பு நாளை நிச்சயம் இருக்கும் பேன்ஸ் யூ டோன்ட் வொரி.

    English summary
    Rajinikanth will definitely come to politics. But it will not be immediate, it will take sometime. Thias will be the main announcement that will be made tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X