For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் பயணத்தை தொடங்கும் கமலுக்கு வாழ்த்துகள்- ரஜினிகாந்த்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கமல் சந்திப்பு குறித்த ரஜினி என்ன சொல்கிறார்?- வீடியோ

    சென்னை: இன்னும் இரு நாட்களில் அரசியல் பயணத்தை தொடங்கும் கமலுக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரை திடீரென சந்தித்தார் கமல்ஹாசன். இன்னும் இரு நாட்களில் அரசியல் கட்சியை தொடங்கும் நிலையில் கமல் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    ரஜினியுடன் கமல் சந்திப்பு

    ரஜினியுடன் கமல் சந்திப்பு

    இந்த நிலையில் இன்று திடீரென போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்றார். அங்கு ரஜினிகாந்தை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினியுடன் நான் சந்தித்தது நட்பு ரீதியிலானது. அரசியல் ரீதியிலானது அல்ல. மதுரை பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு வருவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

    ஆண்டவன் ஆசிர்வாதம்

    ஆண்டவன் ஆசிர்வாதம்

    இந்த சந்திப்புக்கு பிறகு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசியல் பயணம் தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆண்டவனின் ஆசிர்வாதம் கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.

    கமல் பாணி வேறு

    கமல் பாணி வேறு

    சினிமாவிலேயே என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசன் பாணி வேறு. அது போல் அரசியலும் அப்படிதான் இருக்கும். பணத்துக்காகவோ, புகழுக்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

    கார் கதவை மூடினார் ரஜினி

    கார் கதவை மூடினார் ரஜினி

    மக்களுக்கு நல்லது செய்வது என்பதுதான் முக்கியம் என்றார் ரஜினிகாந்த். வாசல் வரை வந்து வழியனுப்பிய ரஜினி, கமல் காரில் உட்கார்ந்ததும் கதவை மூடிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal hassan meets Rajinikanth in Poes Garden house today. After this meeting they both meet media separately. Rajini says that he extends his wish for Kamal's political journey. God bless him in all efforts, he adds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X