For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன்.. பாஜக வலையில் சிக்கமாட்டார்.. கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன், அதனால் பாஜக வலையில் அவர் சிக்கமாட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன், அதனால் அவர் பாஜக வலையில் அவர் சிக்கமாட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்று கூறியுள்ளார். ரஜினி இப்படி மன்னிப்பு கேட்க மறுத்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

பெரியார் குறித்தும், முரசொலி குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் அவரின் வலதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டி உள்ளது. ரஜினியின் இந்த பேச்சு திமுகவையும், திக தொண்டர்களையும், அதிமுகவையும், காங்கிரஸ் கட்சியின் கூட கடுமையாக சீண்டி உள்ளது.

ரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்! ரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்!

என்ன பேச்சு

என்ன பேச்சு

நடிகர் ரஜினியின் பேச்சு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன். அவருக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியும். அவரை அவ்வளவு எளிதாக யாராலும் சிக்க வைக்க முடியாதது. ஆனால் அவர்கள் பாஜகவிற்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார். ரஜினி இப்படி பேசுவது உண்மை தான்.

பாஜக வலை

பாஜக வலை

ஆனால் பாஜக வலையில் அவர் சிக்கமாட்டார். பெரியார் மிக சிறந்த சமூக சீர்திருத்தவாதி. அவரை ரஜினி விமர்சனம் செய்திருக்க கூடாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது துக்ளக் பத்திரிக்கையில் கருப்பு அட்டை படத்தை வெளியிட்டது. பாஜக இதனால் சோவை மிக கடுமையாக கண்டித்தது. இதெல்லாம் வரலாறு.

ரஜினி வரலாறு

ரஜினி வரலாறு

ரஜினிக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. இல்லை ரஜினி தெரிந்தும் இதுகுறித்து பேசாமல் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. வரலாற்றை தெரிந்து கொண்டு ரஜினி பேச வேண்டும். ரஜினி பெரியார் குறித்து படிக்க வேண்டும். பெரியார் என்ன கருத்துக்களை கூறி இருக்கிறார் என்று ரஜினி தெரிந்து கொள்ள வேண்டும்.

பல நாடுகள் எப்படி

பல நாடுகள் எப்படி

பல நாடுகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற நாட்டை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. இதற்காக அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக பாடுபட்டார்கள். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட, நாட்டை பல தேசங்களாக உடைக்க பாஜக முயற்சிக்கிறது. இந்தியாவை மதத்தை வைத்து பிளக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜகவின் இந்த மோசமான கனவு ஒரு போதும் பழிக்காது, என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

English summary
Actor Rajinikanth won't get into BJP's trap says K S Alagiri after the actor's comment on Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X