For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய வாய்ப்பு.. இன்று முக்கிய முடிவு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதான தமிழர்கள் 7 பேரும் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்கிறது.

முதலில் இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின் அந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

என்ன வழக்கு

என்ன வழக்கு

இந்த நிலையில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க போவதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் விடுதலை செய்வது உறுதி என்று தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் மத்திய அரசு இதற்கு எதிராக வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டது.

என்ன தீர்ப்பு

என்ன தீர்ப்பு

இந்த கொலையை சிபிஐ விசாரித்த காரணத்தால், மத்திய அரசுக்கு மட்டுமே விடுதலை செய்ய உரிமை உள்ளது என்று வாதம் வைக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. விதி எண் 161ன் படி தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம் என்று தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருணை மனு

கருணை மனு

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று அவர்கள் ஆளுனரிடமும், முதல்வரிடம் கருணை மனுவை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.

என்ன முடிவு

என்ன முடிவு

ஆனால் ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு ஆளுநர்களிடம் இந்த 7 தமிழர்களும் கருணை மனுவை அளித்துள்ளனர். ஜனாதிபதியிடமும் கருணை மனுவை அளித்து இருக்கிறார்கள். முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் தற்போது தமிழக ஆளுநரிடம் இருப்பதால், என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Rajiv assassination convicts including Perarivazhan will send clemency petition once again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X