For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 பேர் விடுதலை: முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய அரசு பரிந்துரை செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக முதல்வரை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி- வீடியோ

    சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனால் தமிழக முதல்வரை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது.

    Rajiv Case: Aruputhammal Thanked TN CM for cabinet decision on 7 Tamilians release

    ஆலோசனையின் முடிவில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    Rajiv Case: Aruputhammal Thanked TN CM for cabinet decision on 7 Tamilians release

    இதுகுறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று மாலை சந்தித்தார்.

    முதல்வரை நேரில் சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். விடுதலைக்காக பரிந்துரையை செய்ததற்காக தமிழக முதல்வரிடம் நன்றி தெரிவித்தார்.

    English summary
    Rajiv Case: Aruputhammal Thanked TN CM for cabinet decision on 7 Tamilians release.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X