For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையை மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி.. வேட்டியுடன் வரிந்து கட்டிய பல்லாயிரம் இளைஞர்கள்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.

Rally in Chennai Marina demanding Jallikattu!

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.

Rally in Chennai Marina demanding Jallikattu!

இதில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.

புகைப்படம்: வாட்ஸ்அப்

English summary
Rally in Chennai merina for demanding permission for Jallikkattu. over 1000 youngsters participated in this Rally. A NGO has organised for this rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X