For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வி.எச்.பி. ராம ரத யாத்திரை- நெல்லை மாவட்டத்தில் 144 தடை- ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு

ராம ராஜ்ய ரதயாத்திரை தமிழகத்திற்குள் நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரத யாத்திரைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களால் நெல்லையில் பதட்டம்- வீடியோ

    திருநெல்வேலி: விஎச்பி ரத யாத்திரையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 19ஆம் தேதி மாலை முதல் வருகிற 23ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    Ram Rajya Rath Yatra: Section 144 in Tirunelveli from March 19 to 23

    விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சாா்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று தமிழகம் வருகிறது.

    கேரள மாநிலம் புனலூாில் இருந்து புளியரை, செங்கோட்டை வழியாக தமிழகத்திற்குள் ரத யாத்திரை வருகின்றது. மேலும் ரத யாத்திரைக்கு புளியரை பகுதியில் வைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடா்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வழியாக இன்று பிற்பகல் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது. ரத யாத்திரை தொடா்ந்து மதுரை வழியாக 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது.

    இந்த ரத யாத்திரைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சியினரும் கடும் எதிா்ப்பு தொிவித்துள்ளனா். மேலும் தமிழகத்திற்குள் ரதயாத்திரை நுழையும் பகுதியான செங்கோட்டையில் யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவும் பல்வேறு அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

    இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ரத யாத்திரையை மறிக்கப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கூறிவருகின்றன.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 19 தொடங்கி 23 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    English summary
    Rama Rajya Rath Yatra, Collector Sandeep Nanduri has imposed section 144 in the district from 6 pm on March 19 to 6 am on March 23.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X