For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா நிதி உதவி... ராமதாஸ் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா நிதி உதவி வழங்குவது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா 50 மில்லியன் டாலர் நிதி தருவது கண்டனத்திற்குரியது என அவர் கூறியுள்ளார்.

இந்தியா கொடுக்கும் நிதியை பயன்படுத்தி ஈழத்தமிழர்களை சிங்கள அரசு ஒடுக்கக்கூடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.

சுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஒபிஎஸ் பக்தி பரவசம் சுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஒபிஎஸ் பக்தி பரவசம்

50 மில்லியன்

50 மில்லியன்

இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா 50 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா நிதி உதவி செய்யக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவை என்ன?

தேவை என்ன?

ஈழத்தமிழர்கள் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு கொடுத்த உறுதிமொழியை இலங்கை அரசு காப்பற்றவில்லை என்றும், இந்த சூழலில் இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன? எனவும் ராமதாஸ் வினவியிருக்கிறார்.

வெகுமதி

வெகுமதி

ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டிய இடத்தில் இருப்பதாகவும், இந்த நிலையில் அந்நாட்டு அரசுக்கு இந்தியா நிதி உதவி செய்வது வெகுமதியாக தான் அமையும் எனவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஒடுக்கும்

ஒடுக்கும்

இந்தியாவிடம் இருந்து பெறும் நிதியை கொண்டு ஈழத்தமிழர்களை தான் சிங்கள அரசு ஒடுக்கும் என்றும், இதனால் இலங்கைக்கு எந்த நிதி உதவியும் இந்திய அரசு செய்யக்கூடாது என்றும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
Ramados condemns India's financial assistance to the Sri Lanka Army
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X