For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரத்தில் பள்ளி மாணவியை தீ வைத்து எரித்த கொடூரம்... ராமதாஸ் கண்டனம்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்ய முயற்சித்து, காதலர் தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண்ணுக்கு இராம்குமார் என்ற கயவனால் இழைக்கப்பட்டதை விட மோசமான கொடுமை விழுப்புரத்தில் நவீனா என்ற மாணவிக்கு செந்தில் என்ற கயவனால் இழைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உடல் முழுவதும் தீக்காயம் பட்ட நிலையில், மாணவி நவீனா ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

பாலியல் சீண்டல்...

பாலியல் சீண்டல்...

விழுப்புரம் வி.பாளையத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவுக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுத்து வந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், நேற்று நவீனாவின் வீட்டிற்கு அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்ற செந்தில், நவீனாவிடம் தகராறு செய்திருக்கிறார். நவீனா தன்னை காதலிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதை ஏற்க நவீனா மறுத்துவிட்ட நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, மாணவி நவீனாவைக் கட்டிப்பிடித்துள்ளார். இதில் தீக்குளித்த செந்தில் உயிரிழந்து விட்ட நிலையில், ஒரு பாவமும் அறியாத மாணவி நவீனா தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நவீனாவின் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

திட்டமிட்ட கொலைமுயற்சி...

திட்டமிட்ட கொலைமுயற்சி...

நவீனாவுக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமையை செந்தில் உணர்ச்சி வேகத்தில் செய்து விடவில்லை. நவீனாவை உயிருடன் எரித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டே இந்த கொலை முயற்சியை அவர் அரங்கேற்றியிருக்கிறார். நவீனாவின் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தின் பின்னால் நேற்று காலையிலிருந்தே பதுங்கியிருந்த செந்தில், நவீனாவின் பெற்றோர் வேலைக்கு சென்ற பின் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். நவீனாவை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பெட்ரோல் கேனுடன் சென்ற செந்தில், இந்த கொலை முயற்சியில் நவீனா தப்பிவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் முன்புறக் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பின்புறக் கதவு வழியாக நுழைந்துள்ளார். அதுமட்டுமின்றி, தன்னைக் காதலிக்க வேண்டுமென்று மிரட்டியும், நவீனா பணியாத நிலையில்,‘‘என்னைக் காதலிக்க மறுத்த நீ உயிரோடு இருக்கக் கூடாது'' என்று கூறி பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு நவீனாவையும் கட்டிப் பிடித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.

மிரட்டல்...

மிரட்டல்...

நவீனாவின் வீட்டில் இருந்த அவரது தம்பி, தங்கை ஆகிய இருவரையும் கத்தி முனையில் மிரட்டி, இன்னொரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு தான் இந்த கொடூரத்தை செந்தில் அரங்கேற்றியிருக்கிறார். நவீனாவை தீயிட்டுக் கொளுத்தும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், குத்திக் கொலை செய்யும் எண்ணத்துடன் தான் கத்தியையும் அவர் கொண்டு சென்றதாக காவல்துறையினரே கூறியுள்ளனர்.

பாலியல் தொல்லை...

பாலியல் தொல்லை...

நவீனாவுக்கு எதிரான செந்திலின் கொடுமை இன்றோ நேற்றோ தொடங்கியதில்லை. செந்திலின் நாடகக் காதலால் நவீனாவும், அவரது குடும்பத்தினரும் கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். செந்தில் ஓட்டுனராக பணியாற்றிய சிற்றுந்தில் பள்ளிக்கு சென்று வந்த நவீனாவுக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

ரயில் விபத்து...

ரயில் விபத்து...

இந்த தொல்லையை தாங்க முடியாததால், ஒரு கட்டத்தில் நவீனாவை பள்ளிக்கு அனுப்புவதையே பெற்றோர் நிறுத்தி விட்டனர். செந்திலின் தொல்லை அத்துடன் நிற்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடிபோதையில் தமது வீட்டுக்கு அருகிலுள்ள தொடர்வண்டிப் பாதையில் படுத்துக் கிடந்த போது, அவ்வழியே வந்த தொடர்வண்டி மோதி செந்திலின் வலது கையும், வலது காலும் துண்டிக்கப்பட்டன. இதற்காக அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை ஆவணங்களில் இது தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், நவீனாவின் உறவினர்கள் தான் தனது காலை வெட்டித் துண்டித்து விட்டதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொய்யாக புகார் அளித்தார். எனினும், விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து செந்திலை தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து ஒரு மாதத்திற்கு முன் வெளியில் வந்த செந்தில் செயற்கைக் கால் பொருத்திக் கொண்டு நவீனாவை எரித்துக் கொல்ல முயற்சித்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

புதிய கலாச்சாரம்...

புதிய கலாச்சாரம்...

பள்ளிக்கும், வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும், காதலிக்கும்படி மிரட்டுவதும் ஒரு கும்பலின் புதிய கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது. தங்களின் ஒருதலைக் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெண்களை தொடர்வண்டி நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்வதும், பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிப்பதும் அக்கும்பலின் வாடிக்கையாகி உள்ளன. இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுபவர்களுக்கு அவர்களின் சாதியைச் சேர்ந்த சிலர் அளிக்கும் ஆக்கமும், ஊக்கமும் தான் இதுபோன்ற கொடிய செயல்கள் பெருக காரணமாக உள்ளன.

கண்டித்திருக்க வேண்டும்...

கண்டித்திருக்க வேண்டும்...

நவீனாவுக்கு செந்தில் அளித்த பாலியல் தொல்லைகளை அனைவரும் ஒரே குரலில் கண்டித்து இருந்தால் இன்று அந்த அப்பாவிப் பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. மாறாக சில போலி புரட்சியாளர்கள் சாதி பாகுபாட்டுடனும், சாதி வெறியுடனும் செந்திலின் கயமைச் செயல்களுக்கு துணை நின்றது தான் இந்த நிலைக்கு காரணமாகும்.

தூண்டுகோல்...

தூண்டுகோல்...

ஒரு கட்டத்தில் செந்திலின் உண்மை முகம் அம்பலமான பிறகும் கூட அவருக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட தரப்புக்கு எதிராகவும் அவதூறு பிரச்சாரம் மேற்கொண்ட முற்போக்கு முகமூடிகள் தங்களின் செயலுக்காக வருந்தவும் இல்லை; இதுவரை திருந்தவுமில்லை. இத்தகைய செயல்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தூண்டுகோலாக உள்ளன.

நீதி விசாரணை...

நீதி விசாரணை...

மாணவி நவீனாவை செந்தில் உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருப்பதாகவும், இதற்கு பலர் துணை நின்றிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இது குறித்தும், கடந்த காலங்களில் செந்திலுக்கு ஆதரவாகவும், துணையாகவும் செயல்பட்டவர்கள் குறித்தும் விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ரூ. 25 லட்சம் நிதியுதவி...

ரூ. 25 லட்சம் நிதியுதவி...

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவி நவீனாவுக்கு உயர்சிறப்பு மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்வதுடன், அவரது குடும்பத்திற்கு கயவர்களிடமிருந்து பாதுகாப்பு தரவும், ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கவும் அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி நவீனாவுக்கு நீதி வழங்குவதுடன், சுவாதி, நவீனாவுக்கு இழைக்கப்பட்டது போன்ற கொடுமைகள் இனி எப்பெண்ணுக்கும் இழைக்கப்படாமல் தடுப்பதற்கான சூழலை தமிழக அரசும், பொது மக்களும், குடிமக்கள் சமுதாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஏற்படுத்த வேண்டும்''என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

English summary
The PMK founder Ramadoss has condemned the fire attack on school girl in Villupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X