For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. படத்திறப்பு நாள், தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள்: ராமதாஸ்

ஜெயலலிதா படத்திறப்பு நாளன்று தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாளாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோவை: ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா நடைபெறும் நாள், தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாளாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் படத்தை நாளை சட்டசபையில் திறந்து வைக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Ramadoss condemns for Jayalalitha's photo inauguration

திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாளை நாட உள்ளது.

கோவையில் பாமகவின் வேளாண் நிழல் நிதி அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், நிழல் நிதி அறிக்கையில் அரசுக்கு 266 யோசனைகள் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெட்கப்பட வேண்டிய நாள், ஜெயலலிதாவின் படத்திறப்பு நாளாகும் என்றார் அவர்.

English summary
PMK Ramadoss condemns for Jayalalitha's photo inauguration and says that tomorrow is the day on which TN people has to shame.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X