For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக வங்கி என்ன... இனி கந்துவட்டிக்காரர்கள் கூட தமிழக அரசுக்கு கடன் தரமாட்டார்கள்! - ராமதாஸ் நக்கல்

தமிழக அரசுக்கு இனி கந்துவட்டிக்காரர்கள் கூட கடன் கொடுக்க மாட்டார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் 2,950 கோடி ரூபாய் கடன் கோரிக்கையை உலக வங்கி நிராகரித்தது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ் கந்துவட்டிக்காரர்கள் கூட இனி கடன் கொடுக்க மாட்டார்கள் என நக்கல் அடித்துள்ளார்.

தமிழகத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழகத்தில் பாசன நிலங்களை மேம்படுத்தவும், ஏரிகளை புனரமைக்கவும் தமிழக அரசு 2950 கோடி ரூபாய் உலக வங்கியிடம் கடன் கேட்டிருந்தது. இதற்கான திட்ட அறிக்கையையும் உலக வங்கிக்கு அனுப்பியது.

டிவிட்டரில் நக்கல்

டிவிட்டரில் நக்கல்

ஆனால் திட்ட அறிக்கையில் முழுமையான தகவல் இல்லை எனக்கூறி உலக வங்கி கடன் தர மறுத்து தமிழக அரசின் திட்ட அறிக்கையை திருப்பியனுப்பியது. இந்நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நக்கலடித்துள்ளார்.

ராமதாசின் வழக்கம்

ராமதாசின் வழக்கம்

டிவிட்டரில் துடிப்புடன் இருக்கும் தலைவர்களின் பாமக நிறுவனர் ராமதாசும் ஒருவர். எந்தப் பிரச்சனையாலும் உடனடியாக கிண்டலடித்தும் நக்கலடித்தும் டிவிட்டரில் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கந்துவட்டிக்காரர்கள் கூட தரமாட்டர்கள்

தமிழக அரசின் கோரிக்கையை உலக வங்கி நிராகரித்திருப்பதையும் அவர் டிவிட்டரில் கிண்டலடித்துள்ளார். தமிழக அரசுக்கு உலக வங்கி என்ன... இனி கந்துவட்டிக்காரர்கள் கூட கடன் தரமாட்டார்கள்! என ராமதாஸ் கூறியுள்ளார்.

300க்கும மேற்பட்ட லைக்

300க்கும மேற்பட்ட லைக்

எதற்காக ராமதாஸ் இப்படி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் என தெரியவில்லை. ஆனால் ராமதாஸின் இந்த நக்கல் டிவிட்டுக்கு 300க்கும் மேற்பட்டோர் லைக் கொடுத்துள்ளனர்.

English summary
PMK fonder Ramadoss making fun of tamilnadu government in his twitter page for the world bank returning the loan project report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X