For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது? வாரும் ராமதாஸ்

சட்டசபையில் ஸ்டாலினை பேச அனுமதிக்க அரசு அஞ்சுவதாக துரைமுருகன் கூறியதை ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின் பழமொழி சொல்லிவிட்டால் என்ன செய்வது

    சென்னை: சட்டசபையில் ஸ்டாலினை பேச அனுமதிக்க அரசு அஞ்சுவதாக துரைமுருகன் கூறியதை ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியல் நிலவரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    மத்திய அரசு, மாநில அரசு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் என்றும் சரமாரியாக டிவிட்டரில் விளாசி வருகிறார் ராமதாஸ்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு, சேலம் பசுமை வழிச்சாலை உள்ளிட்டவை குறித்து விளாசியுள்ளார்.

    அச்சமாக கூட இருக்கலாம்

    சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினை பேச அனுமதிக்க அரசு அஞ்சுகிறது: துரைமுருகன் & உண்மை தான்... ஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது? என்ற அச்சமாகக் கூட இருக்கலாம்!

    தவறில்லை

    ஜெயலலிதாவைப் பற்றி நான் தவறாகப் பேசவில்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - சரி தான்... ஜெயலலிதா கொள்ளையடித்ததாகத் தானே அவர் கூறினார். அதிமுகவைப் பொறுத்தவரை கொள்ளையடிப்பது தவறானது இல்லை தானே?

    அடிமை ஆட்சி

    சேலம் பசுமைச் சாலைக்கு எதிராக போராடும் மக்கள் தொடர்ந்து கைது: செய்தி - சர்வாதிகாரிகளை விட அடிமைகள் ஆபத்தானவர்கள். சர்வாதிகாரிகள் சமாளிக்க முடியாத போது தான் தாக்குவர். அடிமைகள் ஆரம்பத்திலேயே ஆள் வைத்து தாக்குவர். தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெறுகிறது!

    English summary
    PMK founder Ramadoss Slams ruling paty and opponent party in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X