For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடிக்கு எடப்பாடியார் செல்வதற்கு அது என்ன ஏற்காடா? இல்ல ஊட்டியா? - ராமதாஸ் நக்கல்

தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்கு அது என்ன ஏற்காடா? இல்லை ஊட்டியா? என்று ராமதாஸ் நக்கல் அடித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு-தலைவர்கள் கண்டனம்- வீடியோ

    சென்னை: தூத்துக்குடிக்கு எடப்பாடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவில்லை என்ற செய்திக்கு ராமதாஸ் வழக்கம் போல் தனது பாணியில் பதிலளித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு ,பதிலுக்கு பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். இதையடுத்து போலீஸாரின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    Ramadoss tweet that why Edappadi didnt go to Thoothukudi?

    அப்போது அவர்களை போலீஸார் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்தனர். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க முதல்வர் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ராமதாஸ் தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி நேரில் செல்லவில்லை: செய்தி - அது என்ன ஏற்காடா, ஊட்டியா, கொடைக்கானலா... குடும்பத்துடன் சென்று மலர்க் கண்காட்சியை திறந்து வைத்து மகிழ்ச்சியில் திளைத்து திரும்புவதற்கு? என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Ramadoss says that why Edappadi not visited Thoothukudi after Gun shot?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X