For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வராக 4-ம் ஆண்டில்... எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே.வாசன் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் பதவியில் 3-ம் ஆண்டை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss, Vijayakanth congrats CM Edappadi Palanisamy for Completing 3 years

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமது அறிக்கையில், இன்னும் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லாவிதங்களிலும் நல்லாட்சி தரவேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

குமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்த மாதிரி விஜயகாந்துக்கும்.. ரொம்பவே கனவு காணும் பிரேமலதா குமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்த மாதிரி விஜயகாந்துக்கும்.. ரொம்பவே கனவு காணும் பிரேமலதா

இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

English summary
PMK founder Dr Ramadoss, DMDK Founder Vijayakanth congrats CM Edappadi Palanisamy for Completing 3 years office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X