For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடா நாடாளுமன்றத் தாக்குதல், மதமாற்றத்தின் பின்விளைவே: ராம. கோபாலன்

Google Oneindia Tamil News

Ramagopalan
சென்னை: மதமாற்றத்தால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என்பதையே கனடா நாட்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.

கனடா நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து ராம கோபாலன் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ராம கோபாலன் கூறியுள்ளதாவது:

கனடா நாட்டு பாராளுமன்றம் நேற்று தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் ஈடுபட்டவர்களில் கொலையுண்டவர் அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர் சமீபத்தில் மதமாறியவர் என்பது தெரியவந்துள்ளது.

மதமாற்றம் என்பது ஒரு வழிபாட்டிலிருந்து வேறொரு வழிபாட்டை ஏற்றுக்கொள்வது என்பதில்லை. தனது தேசியத்தின் அடையாளத்தை நீக்கிக்கொள்வதும், தான் பிறந்து, வளர்ந்த தேசத்தை அழித்தொழிக்கும் அளவிற்கு மூளை சலவை செய்யப்படுகிறது என்பதையும் இந்தத் தாக்குதலில் உலகம் உணர்ந்திருக்கும்.

இதனைத் தான் செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவமும், இஸ்லாமும் செய்து வருகின்றன. இதற்கு பல சம்பவங்கள் உலகம் பார்த்துள்ளது, அனுபவித்துள்ளது.

உயிர்களை நேசிக்கும், பரந்த மனப்பான்மை கொண்டதுமான இந்து மதம், கடந்த பத்தாயிரம் ஆண்டு உலக சரித்திரத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றியதில்லை, எந்த ஒரு நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு செய்ததில்லை.

உலகிலேயே வேற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களைக் கட்டிக்கொடுத்தது இந்துக்கள், உலகில் வெறுத்து ஒதுக்கப்பட்ட பார்சிகளையும், யூதர்களையும் அரவணைத்தது இந்துக்கள் என்பது சரித்திர உண்மை.

ஆனால், இந்துக்களை அழித்தொழிக்க, இந்து சமயத்தை, நூல்களை அழிக்க முற்பட்டவர்கள்தான் முகலாயர்களும், மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளின் ஆக்கிரமிப்பாளர்களும் என்பதை நினைவு படுத்துகிறோம்.

மனித நேயம், மனித உரிமை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் இதுகுறித்து உலக அளவில் விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டும்.

மற்ற மதங்களை வெறுக்கும், அழித்தொழித்து தனது மதமே உலகில் இருக்க வேண்டும் எனும் கருத்தை போதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதவாத சக்திகளுக்கு வரும் நிதியை தடுக்க வேண்டும். மதவாத சக்திகளின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். மனித இனத்திற்கு அச்சுறுத்தலான மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Hindu Munnani leader Rama Gopalan has given new angle to the Canadian parliament attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X