For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ்ஸின் வாக்குமூலம் வேடிக்கையாக உள்ளது...ஜி. ராமகிருஷ்ணன் விளாசல்

அதிமுக இணைப்பு குறித்து ஓபிஎஸ் கூறிய வாக்குமூலம் வேடிக்கையாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓபிஎஸை விளாசிய ஜி. ராமாகிருஷ்ணன்- வீடியோ

    தூத்துக்குடி: ஓபிஎஸ் திடீர் திடீர் என மாற்றி மாற்றி பேசுவது வேடிக்கையாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமாகிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெய்தியாளர்களிடம் கூறியதாவது, மார்க்சிஸ்ட் 2-ஆவது மாநாட்டில் 5ம் நாள் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் மீனவர்களில் நலன்களை பாதுகாக்க வேண்டும்.

    Ramakrishnan Says About Ops Comment Over Admk Merger

    சிறுபான்மையினர் நலனையும் பாதுகாக்க வேண்டும். இந்தி திணிப்பு எதிர்ப்பு, கீழடி அகல்வார்ய்ச்சியினை தொடர வேண்டும். விவசாய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். ஆதிச்சநல்லூர் அகழ்வார்ய்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மோடி தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை எதுவும் இதுவரை நிறைவேற்றவில்லை. கடந்த வருடத்திற்கான விவசாய காப்பீட்டு தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

    காவிரி டெல்டா பகுதியில் 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் கருகியுள்ளது. மீன்படித்தல் தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் சட்டத்தினை திருத்த வேண்டும். இந்தியை தேசிய மொழியாக திணிக்க நினைப்பது ஏற்புடையதல்ல.

    ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மீனவர்களுக்கு வழங்கியுள்ள அனைத்து உதவிகளையும் தமிழக அரசு தமிழக மீனவர்களுக்கும் வழங்க வேண்டும். தமிழக மக்களுக்கு பாதகமாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்க கூடாது. ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

    English summary
    Markxist Communist party's state secretary G.Ramakrishnan says that OPS statement over ADMK merger goes as entertainment and comedy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X