For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரமலான் பண்டிகையின் நோக்கம்.. காரைக்குடி பள்ளியில் மாணவர்கள் கொண்டாடிய ரம்ஜான்!

Google Oneindia Tamil News

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரமலான் பண்டிகை 06.07.2016 அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத்தலைவர் கரு. ஆறுமுகம் தலைமையேற்றார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

Ramalan celebrated in Karaikdui school

பைத்துல்மால் மையத்தின் செயலர் ஜமால் ராஜா, மாணவர்களுக்கு ரம்ஜான் செய்தி வழங்கி அவர் தமது உரையில் ரமலான் பண்டிகையின் நோக்கம், நோன்பின் முக்கியத்துவம், தொழுதலின் அவசியம் குறித்தும், நம்மால் இயன்றவரை இல்லாதோருக்கு உதவுதல், பிறருடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை வளர்த்தல், சமாதானத்தை கடைபிடித்தல், சுய ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் போன்ற நற்ப்பண்புகளைப் எடுத்துக் கூறினார்.

Ramalan celebrated in Karaikdui school

மாணவர்கள் ரமலான் விழாவில் இஸ்லாம் இறை வாழ்த்து, பண்டிகை கொண்டாடும் நோக்கம் குறித்த நாடகம், பாட்டு, குரான் ஓதுதல் போன்ற கலை நிகழ்சிகளை நடத்தி காண்பித்தனர்.

இவ்விழாவில் பைத்துல்மால் மையத்தின் நிறுவனர் டாக்டர். கமாலுதீன் அவர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் இனயத்துலா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

Ramalan celebrated in Karaikdui school

பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி செய்திருந்தார்.

English summary
Holy Ramalan festival was celebrated in Karaikdui Ramanathan chettiyar municipal high school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X