• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

”அம்மா” ஆடு குட்டி போடும்... ”அய்யா” டிவி குட்டி போடுமா?- ராமராஜனின் அறிவுபூர்வ கேள்வி

Google Oneindia Tamil News

வேலூர்: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்து வருகின்ற நிலையில் அதிமுக சார்பில் நேற்று ராணிப்பேட்டையில் பேசிய நடிகர் ராமராஜன் அறிவுப்பூர்வமாக கேட்ட கேள்வி மக்களை அப்படியே ஷாக் அடித்த நிலைக்குத் தள்ளியுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரசாரம் மேற்கொண்ட நடிகர் ராமராஜன், ''தேர்தல் தேதி அறிவித்து 1 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.

இன்று வரை சில கட்சிகளில் யாரை சேர்ப்பது என்று பேசிக் கொண்டே இருக்கின்றனர். ஆனா அம்மா தெளிவு, தெளிந்த நீரோடை. ஒன் மேன் ஷோ. எடுத்தா எடுத்தது தான்.

உடனடியாக வேட்பாளர் அறிவிப்பாம்:

உடனடியாக வேட்பாளர் அறிவிப்பாம்:

அதனால் தான் 234 தொகுதிக்கும் வேகமாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள். ஆனால் கருணாநிதி "பழம் எப்ப நழுவி பால்"ல விழும் என்று பார்த்துக் கொண்டே இருந்தார். அது அழுகி வெளியில் விழுந்துவிட்டது.

ஆடிப் போன முதல்வர்கள்:

ஆடிப் போன முதல்வர்கள்:

ஆனால், அம்மாவை பார்த்து இந்தியாவில இருக்கிற மற்ற முதல்வர்கள் எல்லாம் ஆடிப்போயிருக்கின்றார்கள். எப்படி இந்த மாதிரி திட்டம் எல்லாம் போட முடியும் என்று. 15 வருடம் மத்திய அரசு சப்போர்ட் இருந்தும் தி.மு.க கிழித்தது எதுவுமில்லை. இன்றைக்கு வந்து சொன்னீங்களே... செஞ்சீங்களான்னு கேட்கிறார்கள்.

மின் மிகை மாநிலம்:

மின் மிகை மாநிலம்:

ஆனால், அம்மா செய்ததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதியில் ஜெயித்தார். மின் மிகை மாநிலமா மாற்றியுள்ளார் அம்மா. கர்நாடகாவுல பேசி காவிரி தண்ணீரை கொண்டு வந்தாங்க.

டிவி குட்டி போடுமா சொல்லுங்க:

டிவி குட்டி போடுமா சொல்லுங்க:

ஸ்டாலின் நமக்கு நாமேன்னு ஊரை சுத்தி வந்தாரு. ரோட்டு கடையில தோசை வாங்கி சாப்பிட்டாரு. அந்த மாவு அம்மா கிரைண்டர்ல ஆட்டுனது. சட்னி அம்மா மிக்சில அரைச்சது. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு யார் போடுவா. 10 ரூபாய் இருந்தா ஒரு வேளை சாப்பாடு முடிஞ்சிப்போச்சு. எங்கம்மா கொடுத்த ஆடு குட்டி போடும். கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா" என்று அறிவுப்பூர்வமாக பேசி பிரச்சாரம் செய்தார்.

English summary
Actor Ramarajan says AMMA's goat and Karunanidhi's TV in Vellore, Ranipet campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X