For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராம்கோ சிமெண்ட் அதிபர் ராமசுப்பிரமணியராஜா காலமானார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ராஜபாளையம்: ராம்கோ சிமெண்ட் நிறுவன அதிபர் ராம்கோ அதிபர் ராமசுப்பிரமணிய ராஜா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

Ramco Cement founder Ramasubramaniya Raja no more

ராம்கோ சிமெண்ட் அதிபரான ராமசுப்பிரமணிய ராஜாவுக்கு சுதர்சனம் என்ற மனைவியும், வெங்கட் சுப்பிரமணியராஜா என்ற மகனும் உள்ளனர். ராஜபாளையம் அருகேயுள்ள ஆசிரமத்தில் தனது முதுமை காலத்தை அமைதியாக கழித்து வந்தார் ராமசுப்பிரமணிய ராஜா. வயது முதிர்வு தொடர்பான வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மரணமடைந்தார்.

ராம்கோ சிமெண்ட் ஆலை நிர்வாகங்களை வெங்கட்சுப்பிரமணியராஜா கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. ராமசுப்பிரமணிய ராஜா சுற்றுவட்டா பகுதிகளில் மக்கள் மத்தியில் மதிப்பு பெற்றவர். எனவே அவரது உடல் ராஜபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பல்வேறு தொழில் நிறுவனங்களை தொடங்கி மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியவர் ராம்கோ நிறுவன அதிபர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா என்று முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

English summary
Ramco Cement founder Ramasubramaniya Raja died in the illness. He was 82 years old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X