For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுவிலக்கு நிபந்தனை சர்ச்சை... கருணாநிதி 'ட்வீட்' டுக்கு ராமதாஸ் பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை : மதுவிலக்கு விவகாரம் தொடர்பாக, தன்னை டேக் செய்து திமுக தலைவர் கருணாநிதி பதிவு செய்த கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

"ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்ட போது மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது பாமக வைத்தது உண்டா?" என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

karuna twit

இதற்கு பதிலளித்துள்ள ராமதாஸ், ''திமுகவின் கடைநிலை பேச்சாளர் பொதுக்கூட்டத்தில் இக்கேள்வியை கேட்டிருந்தால் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், ‘‘தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி அல்ல... அது தொகுதிப் பங்கீடு தான்'' என்று தொடர்ந்து கூறிவரும் கருணாநிதி இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது இந்த விஷயத்தில் அவர் குழம்பிப் போயிருப்பதை காட்டுகிறது.

மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் போதெல்லாம் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான் ஆட்சி நடைபெறும்.

அதேபோன்ற ஏற்பாட்டை தமிழகத்தில் திமுகவோ, அதிமுகவோ செய்திருந்தால் நிச்சயமாக அதில் மதுவிலக்கை சேர்க்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியிருந்திருக்கும்.

ஆனால், அத்தகையதொரு ஏற்பாட்டுக்கு திமுகவோ, அதிமுகவோ இதுவரை முன்வந்தது உண்டா? என்பதை கருணாநிதிதான் விளக்க வேண்டும்'' என்று ராமதாஸ் பதில் கொடுத்துள்ளார்.

வார்த்தைப்போர், அறிக்கை போர், என மதுவிலக்கு விவகாரத்தில் சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது ட்விட்டரிலும், இது குறித்த கேள்வி பதிலடி பதில்கள் என களை கட்டி வருகிறது.

English summary
PMK Founder Ramdass Gives reply to Karunanithi in Twitter regarding liquer free policy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X