For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் போது ராம்ஜெத்மலானியே அவருக்காக ஆஜராகி வாதாடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ramjethmalani condemns Jaya case Verdict

இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது:

ஜெயலலிதான மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேன்மை மிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

நீதிபதி குன்கா ஊழல் தடுப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லை. அதுவும் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல்.

நீதிபதி குன்கா நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார். அவர் ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி தீர்ப்பை வழங்கவில்லை.

அபராதம் விதித்ததில் நீதித்துறை கோட்பாடுகளை குன்கா மீறிவிட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன்.

இவ்வாறு ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

ஜெ. வழக்கில் ஆஜராகிறார்?

இதனிடையே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத்மலானியே ஆஜராகி வாதாடக் கூடும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Senior Lawyers Ramjethmalani slams the Judge John Michael Cunha's verdict in the case against Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X