For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விக்னேஷ் தற்கொலைக்கும் ராம்குமார் மரணத்திற்கும் தொடர்பு .. நெட்டிசன்கள் பரபரப்பு #Ramkumar

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரிக்காகவும், கர்நாடகா தமிழர்களுக்காகவும் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த விக்னேஷின் தற்கொலைக்கு , ராம்குமார் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் நேற்று தன் உடலில் மின்சாரத்தை பாய்ச்சிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராம்குமாரின் தந்தை மற்றும் சில அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவர் கொலை செய்யபட்டிருக்கலாம் என தொடர்ந்து கூறிவருகின்றனர்.

விக்னேஷ் மரணம்

இதனிடையே , சில நாட்களுக்கு முன்பு காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் தீ குளித்து விக்னேஷ் என்பவர் உயிர் தியாகம் செய்தார். அவரது சாவிற்கும் ராம்குமாரின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக சமூக தளங்களில் தகவல் பரவிவருகிறது.

டுவிட்டரில் பதிவுகள்

இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில்,காவிரி பிரச்சனையும், தீ குளித்து இறந்த விக்னேஷின் மரணம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக மாணவர் களத்தில் இறங்கி போராட்டம் நடத்தினால் மிகப்பெரிய போராட்டமாக அது மாறும் . இதானால் உள்ளாட்சி தேர்தலில் இந்த விவாகாரம் பெரிய தலைவலியாக இருக்கும் என உளவு தகவல் கசித்தாக கூறப்படுகிறது.

ராம்குமார் தற்கொலை

எனவே, விக்னேஷின் செய்த உயிர் தியாகத்தை மக்கள மனதிலிருந்து மறக்கடிப்பதற்காகவும், காவிரி பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்காகவும் ராம்குமாரின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

திசை திருப்பும் செயல்

மேலும் ராம்குமார் மர்ம மரணம் மக்களையும் ஊடகங்களையும் காவிரி பிரச்சனையிலிருந்து திசை திருப்புவதற்காக நடத்தபட்டிருக்கலாம் எனவும் நெட்டிசங்கள் கூறிவருகின்றனர்.

English summary
Ramkumar has stolen the limelight from Vignesh.With one so called Ramkumar suicide , CauveryIssue and Vignesh suicide solved in Tamilnadu Twitterist post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X