For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமுதி அருகே பரவி வரும் மர்ம காய்ச்சல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு-கிராம மக்கள் பீதி

வேகமாக மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: கமுதி அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமம் பறையங்குளம். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே மர்ம காய்ச்சல் ஒன்று பொதுமக்களிடம் பரவி வருகிறது.

Rapidly spreading mysterious fever near Kamuthi

இதன் காரணமாக காத்தனேந்தல் என்ற கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவைதவிர கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

English summary
Because of the rapidly spreading mysterious fever near Kamuthi, more than 100 people have been affected by the massive panic. Because of this, a maternal uncle died in the village of Kattanchendal. The health and poultry management has demanded the villagers to take appropriate action due to the risk that many people suffer from fever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X