• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரிதான நோயால் உயிருக்கு போராடும் சிறுவன்.. கொஞ்சம் உதவுங்களேன்!

சென்னை: மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே அரிதான நோயால் போராடி வரும் என் மகன் உயிர் பிழைக்க உதவுங்கள்.

என் குழந்தை மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே போராடி வருகின்றான். என் குழந்தை இதுவரை நாம் அறிந்திராத ஒரு அபாயகரமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளான். இந்த நோய் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒன்று என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறும் போது கவலையுடன் சேர்ந்து பயமும் எங்களைத் துரத்தி வருகிறது. அவன் ஒவ்வொரு நாள் படும் துயரத்தையும் வெறும் வார்த்தைகளால் என்னால் கூற முடியவில்லை. தினமும் வேதனையால் துடி துடித்து அழுகிறான். அந்த சின்ன குழந்தையால் உடலை வதைக்கும் வேதனையை எப்படி தாங்க முடியும். இந்த நோயால் கடுமையான காய்ச்சல், வலிப்பு, கல்லீரல் பாதிப்பு என்று ஏராளமான வலிகளை அவன் தாங்கி வருகிறான்.

 A rare disorder is consuming my son’s life & our income is insufficient to treat him

எங்கள் 3 வயது குழந்தை தான் சாய் துர்கா மகேஷ். அவன் மிகவும் அரிதான க்ரிஸ்செல்லி சிண்ட்ரோம் (griscelli syndrome) என்ற ப்ரைமரி ஹீமோ போகோசைட் லிம்போ ஹிஸ்டியோசைட்டோஸிஸ் என்ற நோயால் பாதிப்படைந்துள்ளான்.

க்ரிஸ்செல்லி சிண்ட்ரோம் என்பது ஒரு இம்பினோட்வூயன்ஸி டிஸ்ஆர்டர். இந்த நோயில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள எச்எல்எச் செல்களான டி மற்றும் என்கே செல்கள் சர வர இயங்காமல் போய்விடும்.

 A rare disorder is consuming my son’s life & our income is insufficient to treat him

இதனால் நோயெதிர்ப்பு சக்தி அழிக்கப்பட்டு நமது உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்களே நமது திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளான கல்லீரல், மூளை, எலும்பு மஜ்ஜை ஏன் இரத்த திசுக்களைக் கூட அழிக்க ஆரம்பித்துவிடும். எனவே இதை மருத்துவர்கள் "ஆங்கிரி இம்பினியூ செல்கள் (கோபமான நோயெதிர்ப்பு செல்கள்) என்று அழைக்கின்றனர். இந்த நோயை குணப்படுத்த ஒரே வழி அலோஜெனிக் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும். இந்த அறுவை சிகிச்சை செய்ய கிட்டத்தட்ட 12 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

என் பெயர் சிவராணி, நான் சாய் துர்காவின் அம்மா. நாங்கள் ஆந்திராவில் உள்ள ஆன்கோலிருந்து வந்துள்ளோம். எனது கணவர் ஒரு விவசாயி. அவருடைய ஒரு நாள் வருமானம் வெறும் 300 ரூபாய் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன்பு என் மகன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். உடம்பு எல்லாம் நெருப்பாய் கொதித்தது. அவனை தூக்கி கொண்டு ஆந்திராவில் ஆன்கோல் மற்றும் குடூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு எல்லாம் அலைந்து திரிந்தோம். ஆனால் அவனுக்கு வந்திருப்பதை அங்கே கண்டறிய முடியவில்லை. அதனால் நாங்கள் ஆந்திராவில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டோம். இங்கே தான் அவனுக்கு க்ரிஸ்செல்லி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது. இதை சரி செய்ய எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. நல்ல வேளையாக என் மூத்த மகள் ருக்மணியின் எலும்பு மஜ்ஜை சாயுவுக்குப் பொருந்தியுள்ளது. அவன் படும் வேதனைக்கு, நாங்கள் வணங்கும் கடவுள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவன் மறுபடியும் எழுந்து எங்களுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நாங்கள் கடவுளிடம் வேண்டி வருகிறோம்.

 A rare disorder is consuming my son’s life & our income is insufficient to treat him

இத்தகைய கஷ்டமான சூழ்நிலையில் இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் எப்படி பிரட்டுவோம். அரசாங்க மருத்துவமனையில் தான் சிகச்சையை மேற்கொண்டு வருகிறோம். எங்களிடம் பயணச் செலவுக்குக் கூட பணம் இல்லை. ஆனால் இந்த சிகச்சை பணத்தை பிரட்டா விட்டால் எங்கள் மகன் உயிர் பிழைப்பதே அரிதாகி விடும். எங்கள் மனதில் அது தான் ரண வேதனையாக இருக்கிறது. உங்களைத் தவிர எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என் மகனின் அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்ட எனக்கு உதவுங்கள். அவன் வேதனையை போக்க கை கொடுங்கள். உங்களின் சிறு உதவி என் மகனின் வாழ்வை மீட்டெடுக்க எனக்கு உதவும்.

 A rare disorder is consuming my son’s life & our income is insufficient to treat him

சாய் துர்கா மகேஷ் மற்றவர் குழந்தை அல்ல. அவர் நம்முடைய குழந்தை என்று நினைத்து நம் மனிதநேய கரத்தை நீட்டுவோம். ஒன்றுபட்டு ஒரு உயிரை காக்க உதவி செய்யுங்கள். கடவுளுடன் சேர்ந்து நாமும் அந்த சிறுவனின் வாழ்வுக்கு புத்துயிர் கொடுப்போம். இந்த தகவல்களை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாட்ஸ் அப், முகநூல் மூலம் தெரிவியுங்கள். இதுவும் நீங்கள் செய்யும் சிறிய உதவியே

வாருங்கள் உயிர் காக்க உதவி செய்வோம்!

இவர்களுக்கு உதவி நினைத்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

பணம் தேவைப்படுகிறதா? எல்லா வகையான சமூக காரணங்களுக்காகவும் வேகமாகவும் எளிதாகவும் நிதிகளைத் திரட்டுவதற்கு உங்களுக்கு கீட்டோ ஒரு புதிய தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இது சொந்த தேவைக்காகவோ அல்லது சமூக பயன்பாட்டுக்காகவோ அல்லது படைப்பாற்றல் மிக்க உங்களுடைய யோசனை திட்டங்களுக்காவோ கூட இருக்கலாம். நீங்கள் எங்களுடைய எல்லா திட்டங்களிலும் இணைய முடியும். உங்களுடைய நிதி திரட்டும் பணி வெற்றியடைய வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றக்கூடிய, ஓர் அர்ப்பணிப்பு மிக்க குழுவை அமைப்பதுதான். அதனால்தான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான ஓர் இடமாக இந்த உலகை மாற்ற வேண்டும் என கீட்டோ முயற்சித்து வருகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

 
 
 
English summary
A rare disorder is consuming my son’s life & our income is insufficient to treat him.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more