For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னர் வளைகுடாவில் அரியவகை தவளை நண்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: இந்திய கடல்பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை இனமான தவளைநண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 990வகையான நண்டு இனங்கள் கடல்பகுதியில் வாழ்கின்றன.மன்னார் வளைகுடா கடல்பகுதியை யுனஸ்கோ அமைப்பானது பாதுகாத்து வருகிறது.

Rare variety of crab found in Mannar gulf

மன்னார்வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 254வகையான நண்டு இனங்கள் உள்ளன. இதில் 24வகையான நண்டு இனங்கள் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டதாகும். இந்த வகை நண்டுகளில் இருந்து அரியவகையான உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக அரியவகை தவளை நண்டுகள் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

நண்டு இனங்கள், கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் மீன்வள ஆராய்ச்சியாளரும், முன்னாள் மீன்வள கல்லூரியின் பேராசிரியருமான வைத்தீஸ்வரன் இந்த அரியவகை நண்டை தூத்துக்குடி கடல்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளார்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் வைத்தீஸ்வரன் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள தவளை நண்டு இனமானது ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தைவான் ஆகிய கடல்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன.

4.5சென்டி மீட்டர் நீளமும், 10கிராம் எடையும் கொண்ட தவளை நண்டு ராணி ஈ டே வகை குடும்பத்தை சார்ந்தாகும்.இந்த அரியவகை தவளை நண்டு நமது கடல் பகுதியில் கிடைத்துள்ளது இந்தியாவிலேயே முதல் முறையாகும் என்றார்.

English summary
A rare variety of crab has been found in gulf of Manar and researchers are investigating the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X