For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேகர் ரெட்டிக்கு ரூ92 கோடி ரூ2,000 நோட்டுகள் கிடைத்தது எப்படி? ரிசர்வ் வங்கியில் சிபிஐ விசாரணை

சேகர் ரெட்டியிடம் ரூ92 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ92 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து சென்னை ரிசர்வ் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர்.

தமிழக அரசின் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கான்டிராக்டர் பணிகளை செய்து வருபவர் சேகர் ரெட்டி. சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

RBI issues new currrency notes to Sekhar Reddy?

இச்சோதனையில் ரூ135 கோடி ரொக்கம், 175 கிலோ தங்கம் உள்ளிட்டவை சிக்கின. இதில் ரூ92 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் கிடைத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேகர் ரெட்டி மீது வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து நேரடியாக புதிய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து சென்னை ரிசர்வ் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் நேற்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

Sources said that Sekhar Reddy who was very close to Poes Garden enroutes new currency container from RBI to his residence.

போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ92 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து சென்னை ரிசர்வ் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர்.

English summary
Sources said that Sekhar Reddy who was very close to Poes Garden enroutes new currency container from RBI to his residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X