For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

96 ஒரு வெங்காயம்.. உரிக்க உரிக்க கண் சிவந்து.. கடைசியில் அழகு!

Google Oneindia Tamil News

Recommended Video

    உங்களோட '96' அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே!- வீடியோ

    சென்னை: நமது வாசகர் சுரேஷ் ஆறுமுகம், 96 திரைப்படம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டது.

    #எங்கள் தலைமுறையின் (96)அனுபவங்கள் !!!

    முன் குறிப்பு:

    உங்களிடம் அசைபோட ஏதாவது பொக்கிஷங்கள் இருந்தே ஆக வேண்டும்

    • சில நிகழ்வு / தருணம் / திரைப்படம் தான் காலப்போக்கில் மறந்து / மறுத்து / மரித்து போன நினைவுகளை மீண்டும் அசைபோட வைக்கும் இந்த படம் அந்த வகையறா.
    Readers 96 memories
    • 80 + 90 தலைமுறைகளின் வாழ்வியலை இவ்வளவு நேர்மையா இதுவரை யாரும் சொன்னதில்லை. ஆமாம், அப்ப அப்படித்தான் கூட படிக்கும் சக மாணவிகளை எப்படி கூப்பிடுவது என்றே தெரியாது ... ஏய் என்றா / வாடி என்றா / இல்ல பேர் சொல்லியா இப்படி குழப்பத்திலே போயிடும்.
    • இக்கால சினிமாவுக்கான எந்த வரைமுறையும் இல்ல ஆனாலும் மனதோடு அவ்வளவு நெருக்கமாய் தொட்டு கடந்து போகிறது ஒவ்வொரு கதாபாத்திரமும்.
    • அந்த மனிதனின், பாடலை இசையோடு கேட்டால் ஒரு ரகம் - இசை இல்லாமல் கேட்டால் வேறவொரு ரகம். எங்க தலைமுறையின் ஆகப்பெரிய சொத்து ராஜா !!!
    • கிட்டத்தட்ட இந்த படம் ஒரு வெங்காயம் போலத்தான். ஒவ்வொரு தோலாய் உரிக்க உரிக்க கண் சிவந்து சமயத்தில் கசியும் இறுதியில் ஒன்றும் இல்லாமலே போகும் அந்த ஒன்றும் இல்லாமை தான் வெங்காயத்திற்கும் + இந்த படத்திற்கும் அழகோ அழகு !!!
    • ஓர் இரவு முழுக்க இருவர் மட்டும் கட்டற்ற சுதந்திரத்தோடு, ஆனால் ஒரு காட்சியில் கூட விரசமில்லை அது தான் ஒரு தேர்ந்த பார்வையாளனுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பு / சன்மானம். மேலும் அக்கால தலைமுறைக்கு கொடுத்த சன்மானம் கூட

    அடி டா அவள
    உதடா அவள
    வெட்றா அவளனு - மாறிப்போன
    இம் தலைமுறையில்
    மயிலிறகால்
    வருடியது எம் தலைமுறை ....
    கடந்து வந்த
    கால கோலங்களை
    கச்சிதமாய் கட்டியம் சொல்லும்
    காவியம் .... நினைவலைகளில்
    யார் யாரோ !!!

    • இந்த படம் ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பார்த்தது தான் மிகவும் அழகு. ஒரு ஆணை பார்த்து நீ இன்னும் கன்னிப்பயனடா? , நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்டை , அந்த ரம்பா / ஊர்வசி / மேனகா வந்தாலும் பத்திரமா பாத்துக்குவ etc ... இன்னும் இவ்வுலகம் இயங்குவது இம்மாதிரி ரசனையுள்ள பெண்களால் மட்டுமே.
    • இந்தவொரு காட்சி அழகியலின் உச்சம், தன் தவறால் சொல்லப்படாத காதலை தான் விரும்பும் படி அந்த காதலை நினைத்தும் பார்க்கும் வேளையில் கண்களில் கண்ணீர் தேங்கி கீழே வழியாமல் இமையில் நிற்பது கொள்ளை அழகு
    • படம் முடிந்து வெளிவரும் வேளையில் ஒரு பேரமைதி மனதுக்குள். மனது தானே ஒரு அமைதியை தேடுது சட்டென ஒரு விளையாட்டு திடலில் அமர்ந்தால், முடிந்த படம் மீண்டும் ஆரம்பமாகிறது வெவ்வேறு கதாபாத்திர பெயர்களுடன் !!!
    • ஒரு வழியாய் முடிந்து, எப்படி ராமும் ஜானுவும் தத்தமது நினைவுகளை பொக்கிஷமாக பத்திரப்படுத்தி விட்டு பக்குவமாய் பிரிந்தார்களோ அப்படியே செய்து விட்டு கிளம்பியாச்சு வீட்டில் சிவகாமியும் + யுவனும் காத்திருப்பார்கள் !!!

    பின் குறிப்பு:

    குறையென்று சொல்ல முடியாது ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், கடைசி வரை எங்கள் தலைமுறையின் காதலியை சேலையில் காட்டவே இல்லை

    English summary
    Our reader Suresh's take on 96 movie .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X