For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் புலம்ப தேவையில்லை பிரகாஷ் ராஜ் அவர்களே!

Google Oneindia Tamil News

Recommended Video

    சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை- வீடியோ

    சென்னை: பிரகாஷ்ராஜ் என்றவுடன் கம்பீரமான, கனிவான, தரித்திரத்தில் பிறந்தாலும் தன் குழந்தைக்காக எதையும் தொலைக்கும் அப்பா மட்டுமே நினைவில்.

    எ. கா. சந்தோஷ் சுப்பிரமணியம், அபியும் நானும், காஞ்சிவரம். இருவர் படத்தில் நடித்த போதே அரசியலை பற்றி அறிந்து நடித்திருப்பார் போலும். அதனால் தான் அவர் இப்பொழுதும் நடிகர் வேண்டாம் என்று நினைக்கிறார் அதையே வழிமொழிகிறார், உந்தி தள்ளுகிறார் உலகத்திற்கு.

    Reader's comment on Prakash Raj's take on actors

    நம்முடைய இந்தியாவில் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் நம் இந்தியாவின் தலைவர்கள் ஆகலாம். உதாரணத்திற்கு துன்பத்தில் பாடம் கற்று தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை துடைத்த காமராஜர், பட்டினியோடு வாழ்க்கை நடத்தி அவர் புரிந்த செயல்களின் மூலம் மக்களின் மனதில் என்றும் இதயகனி டாக்டர். எம். ஜி.ஆர், திருக்குவளையில் இருந்து புறப்பட்டு தீரமுடன் செயல்பட்டு தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த டாக்டர் கலைஞர், தங்க கிண்ணியில் பால் உணவு உண்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராடிய ஜவகர்லால் நேரு. சின்னப்பிள்ளை என்ற தாயின் சேவை மனப்பான்மையை பார்த்து தன் சிரம் தாழ்த்திய வாஜ்பாய் அவர்கள் என பட்டியல் நீளும் .

    இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நடிகர்கள் வரக்கூடாது என நாள்தோறும் புலம்பும் தலைவர்களுக்கு மத்தியில் பிரகாஷ்ராஜும் சேர்கிறார். அவருக்கு ஒரு அன்பான கருத்து இந்த எளியவளிடமிருந்து. நீங்கள் புலம்ப தேவையில்லை பிரகாஷ்ராஜ் அவர்களே.

    இந்த பூமி எப்படி தன்னை உதைத்தவர்களுக்கு பூகம்பத்தையும், உழைத்து காத்தவர்களுக்கு களஞ்சியத்தையும் கொடுத்ததோ அதை போல இந்த மக்களும் தெளிந்து அறிபவர்கள். இவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தாலும் அந்த வாய்ப்பை பற்றி, கடமையை செவ்வனே செய்தவர்களை மட்டுமே வாழ்த்தி வரவேற்பார்கள். நகல் என்றுமே அசல் ஆகாது.

    படத்தில் வீரியம் கொண்ட வேங்கையை போல் வீர நடை பேசினாலும், வாழ்வில் தங்களை காத்துக்கொள்ளவே இந்த வீணர்கள் விரைகிறார்கள். இதில் யாரும் விலக்கல்ல. இந்த பூமி புனிதத்திற்கு தலை வணங்கும், பொறுக்கிகளுக்கு இடம் அளிக்காது. நாம் பொங்கி எழும் பொது தான் பொங்கல் விழா வேண்டும் என்று நினைக்கும் கற்பனை மனிதர்களுக்கு மத்தியில் நாம் பேசும் எதுவும் விளங்காது.

    உலகம் உருண்டை என்பதால் ஒருநாள் இந்த உலகம் உங்கள் கருத்துக்களை உணரும். ஜிகினாக்களை போல மினுமினுக்காமல், உங்கள் சிந்தையில் பட்டதை பகிர்ந்ததற்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் ஒளிரும் நாள் வெகு தொலைவில் இல்லை. நல்ல கருத்துக்களை பகிரும் உங்கள் பயணம் தொடரட்டும் ஆனால் அவை மற்றவர்களை வருத்தாமல்.

    நன்றி.

    தனிஷ்ஸ்ரீ, சென்னை

    English summary
    Here is our reader's comment on Prakash Raj's take on actors and their political aspirations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X