For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது... விஷால் சொல்லி காவிரியில தண்ணீர் திறந்தாங்களா?- நல்ல கதையா இருக்கே

எனது வேண்டுகோளை ஏற்று காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு நன்றி என்று கடிதம் எழுதிய விஷாலை ஒன் இந்தியா வாசகர்கள் கிண்டலடித்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணை நிரம்புவதால் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். ஆனால் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தனது வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறந்து விட்டதற்கு நன்றி என்று கர்நாடகா அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் நடிகர் விஷால்.

நமக்கு உரிமையான தண்ணீரை தருவதற்கு மழை பெய்து வெள்ளம் வர வேண்டியுள்ளது. அதற்கு நன்றி சொல்லி விஷால் ஏன் விளம்பரம் தேட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகா, அணை நிரம்பியதால் பாதுகாப்பு கருதி வெள்ள நீரை திறந்து விடுகின்றனர் என்றும் ஒன் இந்தியா வாசகர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் சில கமெண்டுகளை படியுங்கள்.

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை

205 டி எம் சி தண்ணீர் உச்சநீதி மன்ற தீர்ப்புப்படி கர்நாடக கொடுக்கணும். அது சட்டம் .... காக்கை உக்கார பனம் பழம் விழுந்த கதையை எங்ககிட்ட சொல்றியா?

நம்பிட்டோம்

நம்பிட்டோம்

சிவா என்பவர் தனது கருத்தில், நம்புறேன் தலைவரே ஆனால் என் பதிவை கொஞ்சம் பாருங்கள் காவேரி நீரை தமிழ்நாடு விவசாயிகள் பாசனத்திற்கு கேட்கும்போது தராத கர்நாடகா அங்கு பருவமழை அதிகரித்து வெள்ளம் வரும்போது அவர்கள் அணையை காப்பதற்காக திறந்துவிட்ட செய்தி உங்களுக்கு தெரியாது என்று நினைக்குறேன்.

தம்பட்டம் வேண்டாம்

தம்பட்டம் வேண்டாம்

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஜூன் முதல் பருவ மழைக்காலம். நீ கேட்டாலும் கேக்கலனாலும் உபரி நீர் திறந்து விடப்படும் தம்பி. இது உன்னாலதான்னு தம்பட்டம் அடிச்சிக்காத என்று பதிவிட்டுள்ளார் ஜி.ஸ்ரீனிவாசன் என்பவர்.

4 நாள் ஆச்சே

4 நாள் ஆச்சே

போன் ஒயர் பிஞ்சு நாலு நாள் ஆகுது என்று சூரியன் பட டயலாக்கை கமெண்ட் அடித்துள்ளார் சோமு என்பவர்.

சிந்தியுங்கள் நண்பர்களே

சிந்தியுங்கள் நண்பர்களே

இதை பாராட்டி எழுதும் நண்பர்களே, உங்களுக்கு உண்மையில் மூளை இருக்கிறதா அல்லது கசாப்பு கடைக்கு விற்றுவிட்டீர்களா..? அதெப்படி ஒரு தனி மனிதன் சொன்னதும் தண்ணீர் திறந்து விட்டார்கள் என் உங்களால் நம்ப முடிகிறது..? அப்படி என்றால் இனி காவேரி பிரச்சனை வரும் போது இவரை மட்டும் பேசாவிட்டால் போதுமா.? சிந்தியுங்கள் நண்பர்களே..

English summary
Oneindia Tamil readers have come down heavily on actor Vishal for his comment on Karnataka's Cauvery water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X